ஸ்டூடியோ பாத்ரூமை திறந்து பார்த்த போது.. – மாரிமுத்து இறுதி நிமிடங்கள் குறித்து சீரியல் நடிகர் பகீர் தகவல்..!

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்களின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சீரியல் நடிகர் கமலேஷ் அவருடைய இறுதி நிமிடங்கள் பற்றி பேட்டி ஒன்றில் பலரும் அறியாத விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது எனக்கு முன்பே மாரிமுத்து அவர்கள் டப்பிங் ஸ்டூடியோவுக்கு வந்து விட்டார். நான் 07:30 மணிக்கு வந்தேன். அவர் பேசி முடித்த பிறகு நான் பேசுவதாக இருந்தது.

அவர் பேசி முடிக்கட்டும் என நான் காத்துக்கொண்டிருந்தேன். பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென எழுந்து வெளியே வந்தார். என்ன சார் என்ன ஆச்சு.. ஒரு மாதிரி இருக்கீங்க.. முகமெல்லாம் வேர்த்திருக்கு என கேட்டேன்.. ஒன்னும் இல்லப்பா.. மூச்சுதிணறல் தான் என்று கூறி விட்டு சில வினாடிகள் தான் என்னுடன் நின்றார்.. உடனே கதவை திறந்து கொண்டு வெளியே சென்றார். நான் ஏதோ பாத்ரூம் சென்று இருப்பார் அல்லது வெளியே நின்று கொண்டிருப்பார் என்று நினைத்து இருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அவர் வரவே இல்லை. எங்கே சென்றார் என்று போய் பாத்ரூம் கதவை திறந்து பார்த்தேன். அங்கே அவரை காணவில்லை. எனக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது. இங்கேதானே இருக்கிறேன் என்று கூறினார் ஆளைக் காணோமே என்று பதறினேன்.

உடனே கார் இருக்கிறதா..? என்று பார்க்கலாம் என்று சென்றேன். கார்-ஐ காணவில்லை. எனவே, அவர் கிளம்பிவிட்டார் போல் தெரிகிறது என்று உடனே அவருக்கு போன் செய்தேன்.

போனை மருத்துவர் எடுத்தார்.. இதுபோல் மூச்சு திணற காரணமாக இங்கு வந்தார் அவருடைய மரணம் அடைந்து விட்டார் என்று கூறினார்கள்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவேளை என்னிடம் அந்த விஷயத்தை கூறியிருந்தால் நான் அவரை தூக்கி கொண்டாவது பக்கத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு ஓடி இருப்பேன். இரண்டு தெரு தள்ளிதான் அந்த மருத்துவமனை இருக்கிறது.

ஆனால், எதுவும் சொல்லாமல் அவர் பாட்டுக்கு கிளம்பி சென்று விட்டார். ஒருவேளை சொல்லி இருந்தால் நான் அவரை அழைத்துச் சென்று இருப்பேன். அவருடைய அருகிலேயே இருந்து அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.

அவர் மரணமடைந்து விட்டார் என்றதும் உடனே மருத்துவமனைக்கு சென்றேன். என்ன.. ஏது.. என்று சென்று பார்த்த போது அவருடைய வாயெல்லாம் நுரை தள்ளி இருந்தது.

என்ன ஆனது ஏதாவது செய்ய முடியுமா..? ஏதாவது செய்யுங்கள்.. என்று கேட்டேன் இல்லை நாங்கள் அனைத்தையும் முயற்சி செய்து விட்டோம்.

இனிமேல் எதுவும் செய்வதற்கில்லை அவர் மரணம் அடைந்து விட்டார் என்று கூறி மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் அனைவரும் அழுதனர்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதன் பிறகு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தோம். முதலில் நேரடியாக அவர்களுடைய ஊருக்கு உடலை எடுத்துச் செல்வதாக தான் திட்டமிருந்தது.

ஆனால் இங்கே இருக்கக்கூடியவர்கள் பார்க்க வேண்டும் எனவே இங்கே மதியம் வரை வைத்திருந்து அதன் பிறகு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லலாம் என்று திட்டமிட்டோம் அதன்படி மாலை வரை இங்கே சென்னையில் வைத்திருந்து அதன் பிறகு தேனீக்கு எடுத்துச் சென்றார்கள் என பதிவு செய்திருக்கிறார் நடிகர் கமலேஷ்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …