சினிமா இயக்குனரும் சீரியல் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். அவருடைய கடைசி பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய குடும்பத்தினர் கொடுத்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார் மாரிமுத்து.
என்னிடம் ஒன்றுமே இல்லாத காலத்திலும் என்னுடைய குடும்பம் என்னுடன் ஓடிவந்தது. கஷ்டமான நஷ்டமோ என்னுடைய மனைவி என் உடன் இருந்தார்.
என்றைக்காவது ஒரு நாள் என்னுடைய மாமா சாதிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தார். எனக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் கிடைக்க சீரியல் சினிமா என இரண்டுமே உதவியாக இருந்தது.
நான் செல்லும் இடத்தில் எல்லாம் என்னை அடையாளம் கண்டு கொண்டு என் அருகில் வந்து புகைப்படம் எடுப்பது ஜேஜே என கூட்டம் போடுவது. ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அங்கே என்னை சுற்றி ஒரு பெரிய கூட்டம் வந்து நிற்பது.
என்னுடன் நலம் விசாரிப்பது என இதனை எல்லாம் என் மனைவி பார்த்த பொழுது உள்ளிருந்து அத்தனை கஷ்டங்களையும் மறந்து விட்டது போல பொங்குவார்.
அப்போதெல்லாம் அதனை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்தை நல்ல முறையில் வைத்திருக்கிறேன் என்ற ஒரு நிறைவு எனக்கு ஏற்பட்டது என பேசி இருக்கிறார்.
aiyo mudiyalai pa Kannu kalngudhu 😭😭💔💔#RIPMarimuthu pic.twitter.com/Rk1qjvLkWx
— RamKumarr (@ramk8060) September 8, 2023
இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீரை அடக்க முடியவில்லை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.