மாரிமுத்து போனில் இருந்த கடைசி வீடியோ..! பார்த்து கலங்கிய குடும்பம்..!

இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 8ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை பல்வேறு துறை பிரபலங்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து உயிரோடு இருக்கும் போது தன்னுடைய காரில் அமர்ந்தபடி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பார்ப்போரின் கண்களை கலங்கச் செய்து வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல் பிரபலத்தின் சகோதரியின் பிறந்தநாளுக்கு மாரிமுத்து அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

எத்தனையோ சினிமாக்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் செய்தால் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

தன்னுடைய நடிப்பின் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் தன்னுடைய கடைசி வீடியோவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா… நான் மோனிஷாவுக்கு அப்பா என்றால்.. உனக்கும் அப்பாதான்.. என்னுடைய மகள் ஐஸ்வர்யாவை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ…? அந்த மாதிரியே உங்கள் இருவரையும் உனக்கு பிடிக்கும்.

நீங்கள் இருவரும் நிறைய திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். நீங்க இருவரும் பல போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.

அதுபோல இன்னும் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை பெற வேண்டும். உனக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாக இருக்கிறது என கேள்விப்பட்டேன்.

அதனால் நீ அதிகமாக வெளிநாடு சென்று உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும். குத்துச்சண்டை வாழ்வீச்சு என பல துறைகளிலும் நீயும் மோனிஷாவும் சிறந்து விளங்குகிறீர்கள்.

இனிவரும் எதிர்காலத்தில் உங்கள் துறையில் அதிகமான சாதனைகளை செய்ய வேண்டும். நீ சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து போன அப்புறம் நானும் உன்னை பற்றி நிறைய பெருமையா பேசிட்டு இருந்தேன்.

இந்த சின்ன வயசுல இவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பதை பார்த்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த உலகமே உன்னுடைய திறமையை கொண்டாட வேண்டும் அதற்கான நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று அந்த வீடியோவில் மாரிமுத்து பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …