நான் இறந்த பிறகு… வீட்டில் இருந்த மாரிமுத்து-வின் லெட்டர்.. – பார்த்து கதறிய குடும்பத்தினர்..!

நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன்பே கைப்பட ஒரு கடிதத்தை எழுதி தன்னுடைய மனைவியிடம் கொடுத்திருக்கிறார்.

அதில், தான் மரணம் அடைந்து விட்டாலும்.. தான் இல்லை என்றாலும்.. எப்படி குடும்பத்தை நடத்த வேண்டும். நான் இருக்கும் போது எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்தீர்களோ..? அதே போல மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் மாரிமுத்து தன்னுடைய மரணத்தை முன்கூட்டியே கணித்திருக்கிறார் என்று பலராலும் கூறப்படுகிறது.

காரணம் நடிகர் மாரிமுத்து ஏற்கனவே இதயத்தில் ஏற்பட்டுள்ள ரத்த நாளங்கள் அடைப்பு காரணமாக இரண்டு ஸ்டெண்ட் வைத்திருந்திருக்கிறார்.

இதன் காரணமாகவே நடிகர் மாரிமுத்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி தன்னுடைய மனைவிக்கு கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஸ்டென்ட் வைத்துள்ளார்கள் என்பதால் அதற்கு உண்டான மருந்து மாத்திரைகளை நாள் தவறாமல் எடுத்துக்கொண்டு தான் வந்திருக்கிறார்.

ஆனால் துரதிஷ்டவசமாக செப்டம்பர் 08-ம் தேதி காலை 08:30 மணி அளவில் அவருடைய இதயம் செயலிழந்ததால் மரணம் அடைந்திருக்கிறார். இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மட்டுமில்லாமல் தன்னுடைய மரணத்திற்கு முன்பே தன்னுடைய குடும்பத்திற்கு சொல்ல வேண்டிய செய்தியை கைப்பட எழுதி கடிதமாக கொடுத்திருக்கிறார். இவர் தற்போது மரணமடைந்துள்ள நிலையில் வீட்டில் உள்ள அந்த லெட்டரை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறியுள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆள்திருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …