Marimuthu : பிரபல தொலைக்காட்சி நடிகரும் சினிமா நடிகருமான மாரிமுத்து சற்று முன்பு மரணம் அடைந்திருக்கிறார்.
இவருக்கு வயது 56 ஆகிறது. திரை உலகினரிடமும் சின்னத்திரை உலகில் இடமும் இவருடைய மரண செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி மாவட்டம் வருசநாடு பகுதி பசுமலை என்ற ஊரில் பிறந்தவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த இவர் வைரமுத்துவின் உதவியாளராக சில காலம் பணியாற்றினார்.
அதன் பிறகு உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் அஜித்தின் வாலி நடிகர் விஜயின் உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். தன்னுடைய டிவி தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மரணம் அடைந்திருக்கிறார் என்பது ரசிகர்களை சோகத்தில் மூழ்க செய்துள்ளது.
டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த டப்பிங் ஸ்டூடியோவில் இவருக்கு மரணம் ஏற்பட்டிருகிறது என்று கூறுகிறார்கள். இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரிமுத்து அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று அறிவித்திருக்கின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.