நடிகர் மாரிமுத்து மறைவு அதனைத் தொடர்ந்து எழுந்த பல்வேறு சர்ச்சைகள் குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சியில் ஜோதிடர்களை எதிர்த்தது ஒருமையில் பேசியது என பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு விதமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணமே ஜோதிடர்களை எதிர்த்தது தான் என்றும் ஜோதிடர்கள் ஏதோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் போல இருக்கிறது என்று கூட ஊடகங்களில் சகட்டுமேனிக்கு தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கின்றது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க செய்தியாளர்களை சந்தித்த மாரிமுத்துவின் மகன் என்னுடைய அப்பா அவருடைய செயல்கள் அனைத்துமே முற்போக்கு சிந்தனைகள்.
அதை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் எதையெல்லாம் செய்ய முடியாமல் போனது போன்ற விஷயங்கள் எல்லாம் எனக்கு சொல்லி இருக்கிறார்.
அதை எல்லாம் செய்வதுதான் என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். கண்டிப்பாக அவர் ஆசைப்பட்ட அனைத்தையும் நான் சிறப்பாக செய்வேன். என்னுடைய அப்பா எனக்கு கடைசியாக சொன்னது இதுதான் என பதிவு செய்திருக்கிறார் அவருடைய மகன்.
மேலும், ஜோதிடர்கள் தான் என் அப்பாவின் மரணத்திற்கு காரணம் என்று வரும் தகவல்களை நான் மூடநம்பிக்கையாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் மாரிமுத்துவின் மகன்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.