காருக்குள் இரண்டு முறை.. தண்ணீர் தண்ணீர்.. வலி… – மாரிமுத்து-வின் ஆன்மா பேசும் வீடியோ..!

மாரிமுத்து : பொதுவாக பிரபலங்கள் இருந்தாலும் அல்லது யாருடைய மரணமாவது அதிகம் பேசப்பட்டாலோ..? அவர்களுடைய ஆவியுடன் பேசுகிறேன் என்று சில யூ-ட்யூபர்கள் மற்றும் ஆவி உலக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் இறந்த ஆன்மாவுடன் பேச முயற்சி செய்து வருவதை பார்த்து வருகிறோம்.

இவையெல்லாம் உண்மையா..? நிஜாகவே அந்த ஆவியுடன் தான் பேசுகிறார்களா..? அவர்கள் பேசுவது உண்மையா..? என்ற எந்த ஒரு முடிவுக்கும் நம்மால் வர முடியவில்லை.

அதே போல இப்படி ஆவியுடன் பேசினேன். ஆன்மாவுடன் பேசினேன் என்று கூறுவதெல்லாம் எந்த ஒரு ஆதாரமாகவும் நம்மால் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனாலும் இப்படியான பிரபலங்கள் இறக்கும் பொழுதோ..அல்லது யாருடைய மரணமாவது அதிகம் பேசப்பட்டாலோ குறிப்பிட்ட நபருடைய ஆன்மாவுடன் பேசும் முயற்சியை பல்வேறு நபர்கள் குறிப்பாக இந்த ஆவி உலக ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கதிர் என்ற யூ-ட்யூபர் மாரிமுத்துவின் ஆன்மாவுடன் பேசி இருக்கிறார் அவருடன் பேசும்போது மாரிமுத்து பேசிய விஷயங்கள் இதோ,

என் நிலைமை கொடுமை கொடுமை… என் மனம் முழுவதும் என்னுடைய குடும்பம்… வலி தாங்க முடியாமல் தவித்தேன்… என் கார் அந்த நொடி என்னால் முடியவில்லை… என்னை காப்பாற்ற நான் முயற்சி செய்தேன் முடியவில்லை…. ஒரே இருட்டு என்ன என்று தெரியவில்லை… ஒன்றுமே புரியவில்லை…

எனக்கு வேணும் தண்ணீர் தண்ணீர்…. காரில் இரண்டு முறை தடுமாறினேன் இருந்தாலும் போராடினேன்… இறுதியாக நிறைய பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது… என் கனவு… என் குடும்பம்… என் வீடு…  அதுதான்… என் அம்மா… என் பிள்ளைகள்…. மனைவி… எல்லோரும் நல்லா இருக்கணும்.

மிஸ் யூ டோட்டல் டீம்… இன்னும் நல்லா வரணும்… உங்கள் அன்பை இப்போது பார்த்து விட்டேன்… நிம்மதியாக வாழ வேண்டும் என்று தான் ஓடினேன்… என் பிரச்சனையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து விட்டேன்… என்னால் எதுவுமே பண்ண முடியல… மூச்சு அடைத்துக் கொண்டது… நான் காற்று தேடி வெளியே வந்தேன்… முடியல… என்னை காப்பாற்ற முயற்சி செய்தேன்… முடியல…

வலி நிற்கவில்லை… தண்ணீர் கூட உள்ளே போகல… தலைசுற்றி உலகமே இருட்டானது.. பேச முடியாமல் போனது… உடல் இல்லை… நான் போகவில்லை இருக்கிறேன்… கவலைப்பட வேண்டாம் நான் தைரியமாக இருக்கிறேன்…

நான் இன்னும் இருந்து இருக்கலாம்… உங்கள் அன்பில் நான் என்னை மிஸ் பண்றேன்… என்னுடைய துணிகளை வயதான ஆதரவற்ற முதியோர்களுக்கு கொடுத்து விடுங்கள்.. நான் தைரியமாக இருக்கிறேன்… மிஸ் யூ ஆல்….

இப்படியாக மாரிமுத்துவின் ஆத்மா கோஸ்ட் பாக்ஸ் மூலம் என்னிடம் பேசியதாகவும் அந்த ஆடியோவையும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் இந்த யூடியூப் கதிர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …