மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணம் – ஜோதிடர்களின் சாபமா..? – இணையத்தில் பரவும் வீடியோ..!

பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து தன்னுடைய சீரியலின் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு அதற்காக மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கே பரிசோதனை செய்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடைந்திருக்கிறார்.

இந்த தகவல் ஒட்டுமொத்த சீரியல் மற்றும் சினிமா உலகினரை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. பலகாலம் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து தற்போது தான் ரசிகர் மத்தியில் பிரபலமாக தொடங்கினார்.

இவர் பேசக்கூடிய அனைத்து பேச்சுகளும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டானது. சீரியல் நடிகர்களிலேயே இவர்கள் ஒரு வித்தியாசமான நடிகராக இருக்கிறார் என்று Thug Life மொமெண்டுகளை இணையத்தில் அன்றாடம் வைரல் ஆக்கி வந்தனர் இவருடைய ரசிகர்கள்.

இந்நிலையில், இவர் திடீரென மரணம் அடைந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவருடைய மரணத்திற்கு ஜோதிடர்களின் சாபம் தான் காரணம் என்று சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

என்ன விவகாரம் என்று பார்த்த பொழுது, ஒரு மாதத்திற்கு முன்பு விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுகிறார் மாரிமுத்து. அப்போது ஜோதிடத்திற்கும் ஜோதிடர்களுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை பேசி இருப்பார் போல தெரிகிறது.

எந்த அளவுக்கு என்றால்… ஜோதிடர்கள் மாரிமுத்துவின் மீது போலீசில் புகார் கொடுக்கும் அளவுக்கு மாரிமுத்து ஜோதிடர்களையும் ஜோதிடத்தையும் பற்றி இழிவாக பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.அது சார்ந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜோதிடர்களை இழிவுபடுத்தியதன் காரணமாக அவர்களின் மனதை நோகடித்ததன் காரணமாகவே தற்பொழுது மாரிமுத்து மரணமடைந்துள்ளார் என்று சில தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனை அறிந்த பலரும் நடிகர் மாரிமுத்துவின் மரணம் எதிர்பாராதது, இயற்கையானது. உலகில் பிறந்த எல்லா உயிருக்குமே மரணம் என்ற ஒன்று உண்டு. அதற்கும் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு பேசிய விவாத நிகழ்ச்சியும் தொடர்பு படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதான பிறந்த ஒவ்வொருவரும், அவர் ஜோதிடராக இருந்தாலும் ஒரு நாள் மரணிக்கத்தான் போகிறார்கள்.

அப்படி இருக்கும் போது மாரிமுத்து-வின் மரணத்திற்கும், விவாத நிகழ்ச்சிக்கும் முடிச்சு போடுவது மிகத்தவறான விஷயம் என்று எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதே நேரம் ஜோதிடத்தையும் ஜோதிடர்களையும் மனம்நோகும் படியாக மாரிமுத்து பேசியது கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஒரு சிலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …