கல்லை மட்டும் கண்டால் பாடலில் கவிஞர் வாலியின் இந்த வரிக்கு அர்த்தம் தெரிஞ்சா புருவத்தை உயர்த்துவீங்க..?

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற படமாகவும் உலக சினிமாவே திரும்பிப் பார்த்த திரைப்படமாகவும் அமைந்தது தசாவதாரம்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தை திரைப்படத்தில் கமல்ஹாசன் கிட்டத்தட்ட பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்.

“தசாவதாரம்” திரைப்படம்

மேலும் படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த அசின் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் கமலஹாசனின் நடிப்பை ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே மிரண்டு போய் பார்த்தது.

கிட்டத்தட்ட 10 கதாபாத்திரங்களில் நடிக்கும் கமலஹாசனின் அதனை கேரக்டரும் 2014ல் ஏற்பட்ட சுனாமியோடு எவ்வாறு தொடர்பு படுகிறார்கள் என்பதே இக்கதையின் மூலக்கரு.

---- Advertisement ----

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழ அரசன் கோவிந்தராஜர் சிலையுடன் ரங்கராஜ நம்பியை பிணைத்து நடுகடலுக்கு எடுத்துச் சென்று வீசும் காட்சிகள் இடம்பெறும்.

பின்னர் இறுதியில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியோடு எவ்வாறு தொடர்பு படுகிறார் என்பது கதையின் இழை.

வரலாற்று சாதனை படைத்த திரைப்படம்:

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ. 200 கோடிக்கும் அதிகமாக மொத்த வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

ரூ. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் பல மடங்கு லாபத்தை தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் பெற்று தந்து சாதனை படைத்த படமாக பார்க்கப்பட்டது.

ரவிவர்மனின் ஒளிப்பதிவில் மிகவும் பிரத்தேகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாகவும் பாடலாகவும் இடம்பெற்றிருக்கிறது .

குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற பள்ளி மட்டும் “கல்லை மட்டும் கண்டால்” பாடல் கேட்டவுடனே ஒரு விதமான சிலிர்ப்பை நம்முள் ஏற்படுத்தும்.

பெரும் புகழ்பெற்ற கவிஞர் வாலியின் வரிகளால் உருவான இந்த பாடலின் அர்த்தம் குறித்த தகவல், அதில் புதைந்துள்ள உண்மை அர்த்தங்கள் பற்றிய தகவலை தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

“கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது”

பாடலில் புதைந்துகிடக்கும் அர்த்தம்:

இந்த வரிகள் கோவிலில் உள்ள சிலையை கல்லாக பார்த்தால் அது வெறும் கல் மற்றும் சிலை வடிவ கலையாகதான் தெரியும்.

அந்த கல்லை தெய்வமாக பார்த்தால் சிலையாக செய்யும்போது வாங்கிய அடிகள் உன் கண்ணுக்கு தெரியாது என்பதனை குறிக்கிறது.

கவிஞர் வாலி எழுதி இருந்த இப்பாடலில் ஒரு சுவாரசியமான தகவல் என்ன என்றால், அதில் ஒரு வரியில் “ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்” என்று எழுதி இருப்பார்.

படத்தில் கமல் கதாபாத்திரம் பெயர் ரங்கராஜ நம்பி… ஆனால் உண்மையில் கவிஞர் வாலியின் இயற்பெயர் “ரங்கராஜன்” தன்னைத்தானே பெருமைப்படுத்தும் விதமாக வாலி இந்த வரிகளை நுழைத்திருப்பார்.

---- Advertisement ----