கண்ணழகி மீனா அக்காவிற்கு 46 வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா  தமிழ் படத்தில் ரஜினிக்கு குழந்தையாகவும் , ஜோடியாகவும் நடித்த பெருமையை பெற்றவர். 1990-களில் இளைஞர்களின் இதயத்தில் ஒரு கனவு கன்னியாக வலம் வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என பல முன்னணி  நடிகர்களோடு இணைந்து நடித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

 அப்போதுதான் இவரது கணவர் நுரையீரல் தொற்று காரணமாக  இறந்துவிட்டார் அந்த சமயத்தில் இவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தவர்   கலா மாஸ்டர்.

 இவரின் ஒரே மகளான நடிகை  நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். சரி நடிப்பை பார்த்து அனைவரும் அம்மாவை போல பிள்ளை என்று பாராட்டி இருந்தார்கள்.

 இதையடுத்து நடிகை மீனாவும் தற்போது அதிகளவு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இதன் மூலம் இவர் இடையே இருக்கக்கூடிய சோகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது.

 இந்தநிலையில் தற்போது இவர் தனது 46வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார் இந்த பிறந்தநாளை முன்னிட்டு  ரஜினிகாந்தின் மகளாக  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்பு அவர்கள் இருவரும் இணைந்து இருந்ததுபோல் எடுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டால் பதிவு செய்து மீனா அக்கா உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்பதை கூறியிருக்கிறார்.

இந்த வாழ்த்துகளைப் பார்த்து மீனா மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக தெரிகிறது. மேலும் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் அவர் தெரிவித்த வண்ணம் இருந்தார்.

முத்து படத்தில்  ரஜினியோடு சரிக்கு சரி போட்டி போட்டு நடித்து இவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல சரக்கு வச்சிருக்கேன் … இறக்கி வச்சிருக்கேன்…  என்ற பாட்டில் இவர் ஆடியிருக்கும் ஆட்டத்தை  இன்றுவரை யாராலும் மறக்க முடியாது மேலும் அந்தப் பாடல் மூலம் எண்ணற்ற இளைஞர்களை நடனத்தால் கட்டி வைத்திருந்தார் என்று தான் கூற வேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …