Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

2 மணி நேரத்திற்கு 13 லட்சம்..! – மீனா குறித்த ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..!

40 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் நின்று சாதித்திருக்கும் பெண்ணாக நடிகை மீனா (Meena) திகழ்கிறார். ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் கதாநாயகியாக தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை இவர் ரஜினிகாந்த் தொடு இணைந்து நடித்த முத்து எஜமான் போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. இவரது கண்ணழகிக்கும், நடிப்புக்கும் ஈடாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

Meena

Meena

என் ராசாவின் மனசிலே என்ற தமிழ் சினிமாவின் மூலம் இந்த சினி இண்டஸ்ட்ரியில் நுழைந்த இவர் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு பெண்ணும் இருக்கிறார்.

இவர் இவரது பெண் நைனிகாவை இளையதளபதி விஜய்யோடு தெறி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியிருந்தார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற வார்த்தைக்கு ஏற்ப சிறப்பான முறையில் இந்த படத்தில் நைனிகா நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார். எனினும் இதனை அடுத்து எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

Meena

Meena

மிக நல்ல முறையில் செய்து கொண்டிருந்த மீனாவின் மண வாழ்கை திடீர் என்று அவர் கணவர் இறந்ததின் மூலம் தடுமாறியது.

 வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த இவரை இவரது தோழிகள் அடிக்கடி இவர் வீட்டுக்கே சென்று தேற்றினார்கள்.மேலும் இவரை திரை உலக பக்கம் திருப்பி விட பல்வேறு வகையான முயற்சிகளை செய்து வந்தார்கள்.

 இந்நிலையில் மீனா திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையைக் கொண்டாடுவதற்காக யூடியூப் சேனல் ஒன்று இவரை அணுகி அந்த விழாவிற்கு வர கூறி இருக்கிறார்கள் வேண்டி இருக்கிறார்கள்.

Meena

Meena

இதில் கலந்துகொள்ள விருப்பம் காட்டாத மீனாவிற்கு 2 மணி நேரம் அதுவும் இரவு நேரத்தில் 8 டு 10 என்று அவர்கள் கூறியதோடு அதற்கு சம்பளமாக 13 லட்சம் தருவதாக கூறியதை அடுத்து இவர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் இவர் அழைத்தால் கட்டாயம் நடிகர் ரஜினிகாந்த் வருவார் என்று இவர் தெரிவித்து இருப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறி இருப்பது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது.

 இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் வெறும் இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சமா? என்று வாய் பிளந்து விட்டார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top