நடிகை மீனா ( Meena ) அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.
இந்த நிலையில், இவரின் சமீபத்திய வீடியோ ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா.
தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.
மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார்.
அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோருடன் மீண்டும் ரஜினியுடன் நடித்தார்.இந்நிலையில், பதின்ம வயதில் பருவ மொட்டாக இருந்த போது நீச்சல் உடையில் நடித்துள்ள மீனாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.