005-ல் அன்பே ஆருயிரே என்கிற தமிழ்ப் படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானார், நிலா ( Meera Chopra ). மீரா சோப்ரா என்கிற பெயரைத் தமிழுக்காக நிலா என மாற்றினார் எஸ்.ஜே. சூர்யா.பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினர் இவர்.
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த நிலா, 2014 முதல் மும்பையில் வசித்து, தீவிரமாக ஹிந்திப் படங்களில் நடிக்க முயன்றார். எனினும் கடந்த 5 வருடங்களில் நான்கு ஹிந்திப் படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார்.
அக்ஷய் கண்ணா, ரிச்சா சத்தா நடித்த செக்சன் 375 என்கிற ஹிந்திப் படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் நிலா நடித்து நல்ல பெயரைப் பெற்றுள்ளார். ஹிந்திப் படங்களில் மீரா சோப்ரா என்கிற பெயரிலேயே நிலா நடிக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வேண்டும், தன் சகோதரி பிரியங்கா சோப்ரா போல புகழடையவேண்டும் என்கிற கனவுகளுடன் இருப்பதால் இவரை இனிமேல் தமிழ் சினிமா பக்கம் பார்க்க முடியாது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுக்கிறார்.
அந்த வகையில், தற்போது டூ பீஸ் உடையில் கொசுவலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு எல்லாமே தெரியும் படி தப்பு தப்பாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.