கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையாக 2000 கால கட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் .
இவர் மலையாள படங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அந்த பிரபலமான நடிகையாக இருந்து வந்தார் .
மீரா ஜாஸ்மின்:
இதனிடையே அவருக்கு தமிழ் மொழியில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க இன்னும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலமான நடிகையாக இடத்தை பிடித்தார்.
மலையாளத்தில் மம்முட்டி மோகன்லால் திலீப் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களுடன் திரைப்படங்களில் நடித்து இருக்கும் மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த நேபாளி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் அவருக்கு. ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும் அடுத்த திரைப்படம் தான் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது .
ஆம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பரட்டை என்கிற அழகுசுந்தரம் திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருப்பார் .
தமிழ் படங்களில் மீரா ஜாஸ்மின்:
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படமாக பார்க்கப்பட்டதால் மீரா ஜாஸ்மினுக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது.
அதை அடுத்து திருமகன் , சண்டைக்கோழி ,கஸ்தூரிமான், ஆயுத எழுத்து, ஜூட் ,ஆஞ்சநேயா, புதிய கீதை, பாலா, ரன் போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக சண்டக்கோழி திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின் நடிப்பு இன்றுவரை ரசிகர்களால் மறக்கவே முடியாது.
துரு துருவென சுட்டி பெண் போன்று அந்த படம் முழுக்க வந்து செல்லும் மீரா ஜாஸ்மின் எல்லோருக்கும் பிடித்தமான நடிகையாக பார்க்கப்ப.ட்டார்.
மீரா ஜாஸ்மின்…ஜெனிலியா… ராஸ்மிகா போன்ற அடுத்தடுத்த நடிகைகள் துரு துரு நடிகைகளாக தமிழ் சினிமாவில் மனம் கவர்ந்த நடிகையாக மிக குறுகிய காலத்திலே பெயர் எடுத்தனர்.
அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்தாலும் கூட மீரா ஜாஸ்மினுக்கு திரைப்படம் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது .
புது நடிகைகளின் வரவால் அவருக்கு மார்க்கெட்டில் இல்லாமல் போய்விட்டது. இதை அடுத்து மீரா ஜாஸ்மின் கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் சில காலம் மட்டும் நடிக்காமல் இருந்த மீரா ஜாஸ்மின் பின்னர் மீண்டும் மலையாள திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
42 வயசாகியும் அது மட்டும் இன்னும் மாறவே இல்ல
இந்த நிலையில் தற்போது தனது Instagram பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவுக்கு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ட்ரெண்டிங் பாடல் ஒன்றுக்கு ரீல் செய்து நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வரலாகியுள்ளது.
மீரா ஜாஸ்மினுக்கு 42 வயசாகியும் அவரது துருதுருவான ஆக்டிவிட்டீஸ் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்காங்களே…
சண்டக்கோழி படத்தில் பார்த்த மீரா ஜாஸ்மின் இன்னும் அப்படியே இருக்கிறார் என தமிழ் ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து லைக்ஸ் குவித்துள்ளனர்.