பூட்டிய பெட்டியில் இருந்து என் ஜட்டியை எடுத்து.. நடிகை மேக்னா நாயுடு கூறிய குற்றச்சாட்டு..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கும் நடிகை மேக்னா நாயுடு அண்மையில் கூறிய குற்றச்சாட்டு ஒன்று இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவர் கூறிய குற்றச்சாட்டை அடுத்து யாரையும் எளிதில் நம்ப கூடாது என்ற தன்மையை நாம் உணர்ந்து கொள்ளும் படி உள்ளது என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக வீட்டை வாடகைக்கு விடும் போது முக்கிய ஆவணங்களை காட்டினால் கூட அது உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை உறுதி செய்து தான் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்தி உள்ளது.

நடிகை மேக்னா நாயுடு..

2002-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த பிரித்வி நாராயணா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான மேக்னா நாயுடு, தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளி வந்த சரவணன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் 2005-இல் ஜாம்பவான் என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தனது அற்புத நடிப்பால் ரசிகர்கள் பலரையும் எளிதில் ஈர்த்துக் கொண்ட மேக்னா நாயுடுவிற்கு அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு வீராசாமி என்ற படத்தில் நடித்ததை அடுத்து 2008-ஆம் ஆண்டு வைத்தீஸ்வரன் மற்றும் பந்தயம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

---- Advertisement ----

மேலும் 2009-இல் குட்டி, வாடா, 2011-இல் சிறுத்தை மற்றும் புலி வேஷம், வேலூர் மாவட்டம் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஜட்டியை கூட விட்டு விடல..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில்  கோவாவில் இருக்கும் தனது வீட்டுக்கு வாடகைக்காரர்களாக குடியமர்த்தப்பட்ட நபர்கள் பற்றி கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

அந்த வாடகைக்காரர்களின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை பார்த்து விட்டு தான் வீட்டை வாடகைக்கு நம்பி விட்டிருக்கிறார். எனினும் ஓரிரு மாதங்கள் சரியாக வாடகையை தந்த இவர்கள் அதனை அடுத்து வாடகையை தரவில்லை.

மும்பையைச் சேர்ந்தவர்கள் என சொல்லி அதற்கு ஆதாரமாக ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமத்தை காட்டி வாடகைக்கு இருந்த இவர்கள் வாடகை செலுத்தாமல் காணாமல் போய்விட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த முக்கியமான பொருட்களை எல்லாம் திருடிச் சென்ற இவர்கள் என்னுடைய உள்ளாடைகளை கூட விட்டு வைக்கவில்லை அதையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை முகநூலில் பதிவிட்டேன். இப்படி முகநூலில் பதிவிட்டால் ஆவது இவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்பதோடு மட்டுமல்லாமல் இவர்களைப் பற்றி அனைவரும் அறிந்து விழிப்புணர்வோடு இருந்திருக்க உதவி செய்யும் என நம்பினேன்.

மேக்னா நாயுடுவின் குற்றச்சாட்டு..

மேலும் இவர்கள் என் வீட்டில் இருந்த பொருட்கள் மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டில் இருந்த சிலவற்றையும் திருடி சென்று இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் போலியான ஆவணங்களை கொடுத்து நடிகை மேக்னா நாயுடுவை ஏமாற்றிய நபர்கள் பற்றியும் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தவறு செய்பவர்கள் உணர்ந்தால் மட்டுமே தவறு நடப்பது தடுக்கப்படும் என்பதை இந்த சம்பவம் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

---- Advertisement ----