மெகா ஸ்டார் ஜோடியாக நடித்த ஸ்ருதிஹாசன்… BTS படத்தை பற்றிய அப்டேட் என்ன?

தெலுங்கு  பட மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின்  மற்றும் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன், மாஸ் மஹாராஜா, ரவி தேஜா நடிக்கும் மெகா154   படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் இயக்குனர் பாபி   சிரஞ்சீவியுடன் இணைந்து மெகா 154 பணியாற்றுகிறார். மாஸ் மஹாராஜா ரவி தேஜா ஒரு முக்கியமான  வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். 

ஹைதராபாத்தில் இந்த படத்துக்கான ஷூட்டிங் நடக்கும் என்றும்  திட்டமிட்ட பகுதிகள் அனைத்தும் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சிரஞ்சீவிக்கு தேவையான அனைத்து விதமான மாஸ்  கேரக்டர் என்ற படத்தில் உள்ளதாகவும்  மிகவும் கச்சிதமாக சிரஞ்சீவி அவர்கள் நடித்து முடித்தார் என்றும் கூறினார்கள்.

 சிறப்பான முறையில் வெளிவர வேண்டும் என்பதற்காக புது புது டெக்னிக்குகளை அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் பணி  செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.Mega154 படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். நிரஞ்சன் தேவராமனே எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

ஆடல், பாடல், வசனம் பேசுதல் போன்றவற்றில் மிகவும் சிறப்பாக விளங்க கூடிய சுருதிகாசன் எந்த படத்திலும் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிப்பார் என்றே அனைவரும் எண்ணுகிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என்பது வெளிவந்த பின்பு தான் தெரியவரும் என்றாலும் இந்த ஜோடி நிச்சயமாக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நடிப்பார்கள். தெலுங்கு மிகப்பெரிய ஹீரோவான சிரஞ்சீவியின் நடிப்பை மீண்டும் ஒருமுறை பார்ப்பதற்கு எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சிறப்பான கதையம்சம் கொண்ட கதையாக இந்தப் படம் அமையும் என்பதற்கு இந்த திரைக்கதை ஆசிரியர்களே சாட்சி. எனவே படம் எப்படி வெளிவரும் என்ற ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.