வெள்ளித்திரை… வேண்டாம் … வெறுத்து ஒதுங்கிய… சன் டிவியின் மெட்டி ஒலி புகழ் சின்ன திரை இயக்குனர் திருமுருகன்!

சன் டிவியின் மெட்டி ஒலி  சீரியலின் டைரக்டராக திகழ்ந்தவர் திருமுருகன். சன் டிவியில் வெளிவந்த சீரியஸான மெட்டிஒலியில்  கோபி என்ற கேரக்டரை செய்து தமிழக மக்களின் இதயங்களில் குடி புகுந்தவர். இவரை திருமுருகன் என்று கூறுவதை விட கோபி என்று கூறினால் தான் பல பேருக்கு உடனே ஞாபகம் வரும்.

இவர் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மட்டுமல்லாமல் நாதஸ்வரம்,  கல்யாண வீடு, குலதெய்வம் போன்ற பல வெற்றிகரமான சீரியல்களை இயக்கியவர்.

சின்னத்திரையில் ஜொலிப்பவர்கள் விரைவில் வெள்ளித்திரைக்கு சென்று அந்த வெற்றி பெறுவார்கள்.இதற்கு நல்ல உதாரணமாக நம்ம சிவகார்த்திகேயன் மற்றும் நகைச்சுவை நடிகர் மற்றும் ஹீரோவான சந்தானத்தையும் கூறலாம். இதில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமான வளர்ச்சி என்றுதான் கூற வேண்டும்.

அந்த வரிசையில் திருமுருகன் சாதித்தார் என்று பார்க்கும்போது அது இல்லை என்றுதான் நாம் கூறவேண்டும். குடும்ப பாங்கான சீரியல்களை கொடுத்து ஒவ்வொரு வீடுகளிலும்  நற்பெயரை எடுத்த இவர்  வெள்ளித்திரையில் இரண்டு படங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

முதல் படமானது பரத் நடிப்பில் வெளியான எம் மகன் இந்த படத்தில் பரத் நடிப்பும் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. இதில் பரத்துக்கு தாய் மாமனாக வடிவேலு நடித்திருந்தார். பரத்தும் வடிவேலு சேர்ந்து  அடித்த லூட்டி மக்களை சென்றடைந்தது. என்றாலும் இந்த படம் ஏனோ கமர்சியல் ரீதியாக வெற்றி வாகை சூட வில்லை.

---- Advertisement ----

 தனது முயற்சியை கைவிடாமல் திருமுருகன் தனது இரண்டாவது படத்தில் படத்தின் பெயரை வித்தியாசமாக வைத்தார் படத்தின் பெயர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்பதாகும். இந்த படத்திலும் திருமுருகன் வடிவேலுவை வித்தியாசமான கோணத்தில் கையாண்டார் என்று தான் கூற வேண்டும். இதில் வடிவேலு சொரிமுத்து அய்யனார் என்ற படத்தில் காமெடியில் கலக்கினார்.

மேலும் இந்த இரண்டு படங்கள் வர்த்தக ரீதியாக இவருக்கு வெற்றியையோ நற்பெயரையோ பெற்றுத் தரவில்லை. எனவே இவர் போதுமடா சாமி என இந்த படங்களோடு நமக்கு வெள்ளித்திரை சங்காத்தம் என வெள்ளி திரையை விட்டு ஒதுங்கி விட்டார்.

திரைத் துறையை பொறுத்த வரை திறமை மட்டும் போதாது கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று இதனால்தான் கூறுகிறார்கள்.

---- Advertisement ----