அமைச்சர் பொன் முடி மீது கடும் அதிருப்தியில் பள்ளி மாணவிகள்..!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு துறை கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் திருக்கோவிலூரில் வேறொரு நிகழ்ச்சிக்கு சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியடைந்தனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று காலை செய்தித்துறை சார்பில் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் புகைப்படக் கண்காட்சியினை விழுப்புரம் திரு. காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைக்க இருந்த நிலையில் காலை 8 மணிக்கெல்லாம் மாணவர்களையும் பள்ளி மாணவிகளை இந்த விழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வந்து அமர வைக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல அரசு அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர்.

ஒரு மணி நேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்து திமுகவினர் அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருப்பதாக கூறியதால் ஏமாற்றமடைந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அமைச்சர் அன்றைய தினம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள் அனுமதி வாங்காததே இதற்கு காரணம் என திமுகவினர் கூறினர். அமைச்சர் வராதது குறித்து ஒரு மணி நேரம் கழித்து கூறியது மாணவ மாணவிகள் ஏமாற்றமடைந்ததோடு சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …