வீடியோவ 3 நாள்ல தூக்கனும்..! இல்லேனா, வேற மாதிரி ஆகிடும்..! வார்னிங் கொடுத்த அமைச்சர் – ஷாக் ஆன சன்னி லியோன்

1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் ( Sunny Leone ) சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சரிகமா மியூசிக் இசை வீடியோவை மதுபன் என்ற தலைப்பில் புதன்கிழமை வெளியிட்டது, இதில் கனிகா கபூர் மற்றும் அரிந்தம் சக்ரவர்த்தி பாடிய பாடலில் சன்னி லியோன் இடம்பெற்றுள்ளார்.

இதை தடை செய்யக்கோரி மதுராவைச் சேர்ந்த சாமியார்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேசம் மதுராவை சேர்ந்த தலைமை மத குருவான சந்த் நாவல் கிரி மகராஜ் கூறியதாவது:-கிருஷ்ணர்-ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்னி லியோனும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். மீறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என கூறி உள்ளார்.

அந்த வகையில் தற்போது மத்தியப்பிரேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா, மதுபன் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, நடிகை சன்னிலியோன், பாடகர் ஷரிப், ஜோஷி ஆகியோரையும் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்துக்களின் மத உணர்வுகளை புரிந்து கொண்டு இந்த வீடியோவை அடுத்த 3 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதை செய்யாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இதையடுத்து இப்பாடலை வெளியிட்ட சரிகம நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மதுபன் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை நீக்கிவிட்டு மீண்டும் இப்பாடல் புதிய வடிவில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் இந்துக்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்களைச் செய்ய முன்வந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …