நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தில் நடிகர் வடிவேலு காமெடியனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காமெடி காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமான ஒன்று.
அதுதான்.. வாம்மா மின்னல்.. என்ற காமெடி காட்சி இந்த காட்சியில் மணப்பெண்ணாக நடித்திருந்தவர் பெயர் நடிகை தீபா.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் வடிவேலு மூலமாக தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. நடிகர் வடிவேலு இந்த காட்சியின் படப்பிடிப்பின் போது திடீரென குறுக்கிட்ட நடிகர் வடிவேலு உங்களுடைய கண்ணை கோணலாக வைத்துக் கொண்டு நடியுங்கள் என்று கூறினார்.
அதுதான் சரியாக இருக்கும்.. இந்த காட்சிக்கு.. நகைச்சுவையாகவும் இருக்கும் என கூறினார். சரி என்று செய்தேன். ஆனால் அதுவே எனக்கு மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு கேள்விக்குறியாக அந்த காட்சி அமைந்துவிட்டது.
ஏனென்றால், அந்த காட்சியை பார்த்த பல்வேறு இயக்குனர்கள் எனக்கு நிஜமாகவே கண் அப்படித்தான் இருக்கும் போல் தெரிகிறது என நினைத்து விட்டார்கள். அதனால் தான் தங்களுடைய படங்களில் நடிக்க என்னை பற்றி யோசித்துப் பார்க்கவில்லை என கூறினார்கள்.
நானே நிறைய இயக்குனர்களிடம் இது பற்றி கேட்டிருக்கிறேன். உங்களுடைய கண் கோணலாக இருக்கும் என்று நினைத்து தான் உங்களுடைய பெயரையே நாங்கள் யோசிப்பது கிடையாது என கூறினார்கள்.
இதை எத்தனை பேருக்கு நான் சொல்லி புரிய வைக்க முடியும். அதன் பிறகும் சில திரைப்படங்களில் நடித்த அரசு, சாக்லேட், ஆளுக்கு ஒரு ஆசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தேன்.
ஆனால், எனக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. காரணம், நான் நடித்த ஒரு காட்சி ஹிட் ஆகிவிட்டது. அந்த காட்சியில் நான் கோணலாக கண்ணை வைத்திருந்தால் நிஜமாகவே எனக்கு அப்படித்தான் இருக்கிறது போல என பலரும் நினைத்து விட்டார்கள்.
அதே நேரம் என்னுடன் அறிமுகமான நடிகைகள் பலரும் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்கள். ஆனால் நான் இன்னும் தொடங்கிய இடத்தை விட்டு நகராமல் இருக்கிறேன் என்றெல்லாம் வேதனைப்பட்டு இருக்கிறேன்.
சில விஷயங்களுக்கு நான் ஒத்துப் போகவில்லை என்பதால் தான் அந்த இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்று இருந்தாலும் என்னுடன் அறிமுகமான பல நடிகைகள் என்று வேற லெவலில் இருக்கிறார்கள் நான் தற்பொழுது இந்த நிலையில் இருக்கிறேன் என கூறியிருக்கிறார் நடிகை மின்னல் தீபா.