Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு வில்லியாக மாறிய மீரா ஜாஸ்மின்..! இது எப்ப..? – பரபரக்கும் திரையுலகம்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர் மீரா ஜாஸ்மின்.(Meera Jasmine) லிங்குசாமி இயக்கத்தில், ரன் படத்தில், அப்போதைய சாக்லேட் பாய் ஆக அழைக்கப்பட்ட நடிகர் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தொடர்ந்து, பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்தார். சண்டக்கோழி, திருமகன், ஆயுத எழுத்து, நேபாளி, ஜூட், ஆஞ்சநேயா, புதிய கீதை, கஸ்தூரி மான், மெர்க்குரி பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் மீரா ஜாஸ்மின் நடித்தார்.

மீரா ஜாஸ்மின்

Meera Jasmine

வசீகரமான முக அழகை கொண்ட மீராவை, தமிழ் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனதால், அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். அந்த வகையில் விஜய், அஜீத், மாதவன், பரத், எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு, தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து போனதால், மலையாள படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டினார்.

மீரா ஜாஸ்மின்

Meera Jasmine

--Advertisement--

கேரள மாநிலத்தை பூர்வீகமான கொண்ட இவர், மலையாள படங்களில் நிறைய நடித்திருக்கிறார். இதில் சில படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, சிறப்பு விருதுகளும் பெற்றிருக்கிறார்.மீரா ஜாஸ்மின், இப்போது சமூக வலைதளங்களில் மிக ஆர்வமாக இருக்கிறார். இதனால், அடிக்கடி தனத கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

கடந்த 90 களில், ரசிகர்களை தனது இளமையான அழகால் வசீகரித்த மீரா ஜாஸ்மின், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பாரா என, ஒரு தரப்பு ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கின்றனர். அதுவும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து அசந்து போன ரசிகர்கள், மொபைல் திரையில் பார்த்து ரசிக்கும் அழகை, பெரிய திரையில் பார்த்து ரசிப்பது எப்போது? எனவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாக, மீரா ஜாஸ்மின் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.

மீரா ஜாஸ்மின்

Nayanthara

இப்போது, 40 வயதுகளை கடந்துள்ள மீரா ஜாஸ்மின், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் என்ற படத்தில், மீரா ஜாஸ்மினும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.விக்ரம் வேதா, மண்டேலா படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த், இந்த படத்தில் இயக்குநராக அறிமுகமாகி இயக்குகிறார்.

சக்தி ஸ்ரீகோபாலன் என்ற பாடகி, இந்த படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.மிக விரைவில், பெங்களூருவில் இந்த டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும்,அடுத்த ஆண்டில் இந்த படம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

மீரா ஜாஸ்மின்

Nayanthara

தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. அவருக்கு எதிராக அதாவது வில்லியாக, மீரா ஜாஸ்மின் கேரக்டர் இருக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவன், சித்தார்த் என இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்பதால், இதில் ஒருவருக்கு மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடிக்கவும் வாய்ப்புள்ளது. அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த படம், தயாரிப்பாளரும் இயக்குநராக எடுப்பது இன்னும் கூடுதலான கவனத்தை பெற்றுள்ளது. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top