Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நான் சைவம் என்பதால் எனக்கு “அது” வரல.. ரகசியம் உடைத்த மிர்ணாளினி ரவி..!

Tamil Cinema News

நான் சைவம் என்பதால் எனக்கு “அது” வரல.. ரகசியம் உடைத்த மிர்ணாளினி ரவி..!

இன்று இந்தியாவில் தடை செய்யப்பட்ட tiktok செயலியின் மூலம் தனது அற்புதமான நடிப்பை வெளியிட்டு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றவர்ஸதான் மிர்ணாளினி ரவி.

இதையும் படிங்க: அடிக்கிற வெயிலில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. மொதல்ல அதுக்குள்ள போகனுமாம்!


தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடியவராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து ஈர்த்ததின் காரணத்தால் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் வட்டாரம் அதிகம் என சொல்லலாம்.

மிர்ணாளினி ரவி..

ஆரம்பகாலத்தில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்கிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் டிக் டாக் செயலி மற்றும் டப்மாஸ்சை பயன்படுத்தி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகமாக பெற ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் இவரது வீடியோக்களை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பார்த்ததை அடுத்து சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக இவரை ஆடிஷனுக்கு அழைத்து இவருக்கு பட வாய்ப்பு தந்திருக்கிறார்.

--Advertisement--

இதனை அடுத்து சுர்சீந்திரனின் சாம்பியன் என்ற படத்தில் முன்னணி நடிகையாக நடித்த இவர் 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.


மேலும் இவர் தமிழில் பொன்ராம், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நான் சைவம் அதனால அது வரல..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கங்களில் அதிக கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போடுவார்.


அது மட்டுமல்லாமல் பேட்டிகள் பலவற்றில் பேசி ரசிகர்களை ஈர்த்து வரக்கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்று தனது உடல் எடை எப்படி பிட்டாக இருப்பதற்கு என்ன காரணம் என்ற ரகசியத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து இருக்கிறார்.

ரகசியம் உடைத்த மிர்ணாளினி..

அந்த வகையில் மிர்ணாளினி அசைவத்தை விரும்பி உண்ணாதவர். சைவம் சாப்பிடுகிற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிகளவு கொழுப்பு சேராமல் உடல் எடை எப்போதும் போல் இருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினம் தோறும் உடற்பயிற்சி செய்து வரக்கூடிய இவர் டயட்டெல்லாம் இருப்பதில்லை. எனினும் ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற விஷயங்களை அளவோடு உண்பாராம்.

எந்த உணவு பொருளும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப குறைந்த குவாண்டினிட்டியில் நாம் உணவினை உட்கொள்ளும் போது அது பெரிய பாதிப்பை உடலுக்கு ஏற்படுத்தாது. மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எல்லாவற்றையும் சாப்பிடுவது அவசியமாகும்.


இதனால் தான் ஒரு சைவம் என்பதால் அசைவத்தில் இருந்து வரக்கூடிய கொழுப்பு எனக்கு வரல என்னுடைய உடல் அப்படியே இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்புவதாக கூறியிருக்கும் விஷயம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு உடல் கட்டுக்கோப்பாக இருக்க உண்டான ரகசியத்தை இவர் உடைத்து கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பலநாள் கேள்விக்கு பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்..! என்ன இப்படி சொல்லிட்டாங்க..?

எனவே நீங்களும் அதிகளவு அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் குறிப்பிட்ட உணவை குறிப்பிட்ட அளவு உண்டு வந்தால் கட்டாயம் நீங்களும் உங்கள் உடல் எடையை சரியான வகையில் பராமரிக்க முடியும் என்பது வரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top