வெற்றியை விதைப்போம் வாங்க ….

தன்னம்பிக்கை என்பது ஓரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை தான்.வெறும் நம்பிக்கை மட்டும் நமக்கு வெற்றி வாயிலை திறக்காது.உன் நம்பிக்கையோடு விடாமுயற்சி,கடுமையான உழைப்பு, திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

இந்த தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வரையறுக்கும் முக்கியமான குணங்களில் ஒன்று என ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவால்  கூறப்பட்டது. நம்பிக்கை தான் வாழ்க்கையின் மூலதனம்.நாம் தடுமாறும் சந்தர்ப்பங்களில் நம்மை தாங்கிபிடிக்கிறது.

தோல்வியை பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் அணுகுவதில் தான் சிக்கல் ஏற்படுகிறது. தோல்வி என்பதை அனுபவமாக கருதினால் வெற்றி என்பது உன் வாயிலில் காத்திருக்கும்.

---- Advertisement ----

தினந்தோறும் மனதில் என்னால் முடியும் என்ற மந்திரச் சொல்லைச் சொல்லிக் கொண்டே இருங்கள். நம்பிக்கை ஒரு நாளும் பொய்க்காது. தன்னம்பிக்கை மிகுந்த மனிதராக உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.

விருப்பத்தோடு வாழ்பவர்களை விட, விதி என்று வாழ்பவர்களே இந்த உலகில் அதிகம். முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மீண்டும் மீண்டும் முகம் காட்டுவது முட்டாள்தனமானது. காலையில் தூங்கி எழுந்தால் நம் வேலையை நாமே பார்க்கலாம் ஒருவேளை  நாம் எழவில்லை என்றால் நம் உறவினர்கள் நமக்கு செய்யவேண்டிய வேலையை முறையாக பார்ப்பார்கள்.அவ்வளவு தான் வாழ்க்கை. இதனை உணர்ந்தாலே வாழ்க்கை யின் எதார்த்த நிலை புரியும்.

உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை சீர்தூக்கிப் பார்த்து ஒரு செயலில் இறங்க வேண்டும்.இறங்கிய பின்னர், “என்னால் முடியுமா?’ என்ற சந்தேகம் உங்களுக்கு எழக்கூடாது.

நீங்கள் எந்த வார்த்தை யை அடிக்கடி சொல்கிறீர்களோ அந்த வார்த்தை ஓரு நாள் உண்மையாகும். எனவே வெற்றி அடைவேன் எனும் வார்த்தையை நீங்கள் அடிக்கடி கூறிக்கொண்டு இருங்கள்.உங்கள் எண்ணம் திடமாக இருந்தால் நிச்சயமாக வெற்றி கனியை எட்டிப்பறிக்கலாம்.

நம்முடைய இலக்கை நோக்கி முன்னேறும் வெற்றிப் பாதைகளில், ஒவ்வொரு மைல் கல்லை கடக்கும்போது, முதுகில் நாமே தட்டிக் கொடுக்கலாம். நீங்கள் பெற்ற வெற்றியை அடக்கமாகவும், எளிமையாகவும் கொண்டாடலாம். அப்போது உங்களுக்கு உற்சாகமும், புத்துணர்ச்சியும் அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் மேலும் சில வெற்றிகளை எளிமையான நீங்கள் சுவைக்கலாம்.

---- Advertisement ----