நாக்கில் சுவையை தூண்டும் அப்பளக் குழம்பு.

வீட்டில் காய்க்கவில்லை என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.அப்பளம் இருந்தால் போதும் சூப்பரான குழம்பை நீங்கள் செய்யலாம். இந்த குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னும் வேண்டும் என கேட்கும் வகையில் சுவையோடு இருக்கும்.

அப்பள குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

  1.  10 முதல் 15 பொரித்த அப்பளம்.
  2. கடலைப் பருப்பு 25 கிராம்.
  3. உளுத்தம் பருப்பு 20 கிராம்.
  4. மல்லி 30 கிராம்.
  5. வரமிளகாய்.
  6. உப்பு.
  7. கடலை எண்ணெய்.
  8. கருவேப்பிலை.
  9. கடுகு.
  10. பெருங்காயம்.
  11. சீரகம்.

செய்முறை

முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு கடலை எண்ணெய் ஊற்றி அதில் கடலைப் பருப்பு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு இவற்றை இளம் சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேவை எனில் சிறிதளவு புளியை சேர்த்துக் கொள்ளலாம்.

---- Advertisement ----

பின்னர்  இந்தக் கலவையை ஒன்று அல்லது இரண்டு அரை டம்ளர் தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.மேலும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் கெட்டி பதத்திற்கு வரும். அந்த பதத்திற்கு வந்த பின்பு அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சிறிதளவு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் கொட்டி விடவேண்டும் கொட்டி விட்ட பின்னர் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது பொரித்து வைத்திருக்கும்  அப்பளத்தை நன்றாக நொறுக்கிப் அப்படியே குழம்பில் போட்டு நன்கு கலக்கி விடவும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி தொடக்கம் அப்பளக் குழம்பு தயார் இதனை சுடு சாதத்தில் இந்த சுவை அதிகமாக இருக்கும்.

---- Advertisement ----