“கேமராமேன்.. கைய குடு சகல..” பார்ட் பார்டாக காட்டி கிக் ஏற்றும் மிருணாளினி ரவி..!

மிருணாளினி ரவி ( Mirnalini Ravi ) டிக்டாக் செயலி மூலம் வீடியோ காட்சிகளை வெளியிட்டு பிரபலமானவர். அந்த பிரபலம் தந்த வாய்ப்பால், சினிமா நடிகையாகும் வாய்ப்பை பெற்றவர்.

முன்பெல்லாம், சினிமா துறை சார்ந்தவர்களின் வாரிசுகள் எளிதில் சினிமா நடிகராக, நடிகையாக வரும் வாய்ப்பு இருந்தது. அப்படி வந்த வாரிசு நடிகர், நடிகையரை இங்கு பட்டியலிட்டு கூற முடியும்.

ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சிவக்குமார், பாக்யராஜ் போன்ற நடிகர்களின் மகன்கள், மகள்கள் ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஜய பிரபாகரன், சிபிராஜ், விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், கார்த்தி சூர்யா, சாந்தனு இன்று நடிகர்களாக இருக்கின்றனர்.

மிருணாளினி ரவி
Mrinalini Ravi

அதே போல் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன்தான் விஜய். தியாகராஜன் மகன்தான் பிரசாந்த். கீர்த்தி சுரேஷ் அம்மா, முன்னாள் நடிகை தான். அதிதி இயக்குநர் ஷங்கர் மகள்தான்.

அடுத்து, நடிகர் அர்ஜூன் மகள், குஷ்பு மகள்களும் நடிக்க உள்ளனர். இப்படி நடிகர், நடிகையர் வாரிசுகளாக இருந்து, திரை வாய்ப்புகளை பெற வேண்டிய சூழலில், டிக்டாக், டப் மேட்ச் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமாகி, அதுவே படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் சிலருக்கு பெற்றுத் தந்து விடுகிறது.

ஜிபிமுத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, பவானியை சேர்ந்த தனலட்சுமி, வணக்கம்டா மாப்ளே போன்றவர்களை சொல்லலாம். இதில் தனலட்சுமி, கடந்தமுறை பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டவர்.

மிருணாளினி ரவி
Mrinalini Ravi

மிருணாளினி ரவி, டிக்டாக் செயலி மூலம் ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்று நடிகையானவர். பாண்டிச்சேரியை சேர்ந்தவர். பொறியியல் பட்டப் படிப்பை முடித்த பிறகு, ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். ப்ரீயாக இருக்கும் நேரத்தில், டிக்டாக் மற்றும் டப்மாஷ் வீடியோக்களை அப்டேட் செய்தார்.

மிருணாளினி ரவி
Mrinalini Ravi

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இவரது வீடியோக்களை பார்த்து, அதன்மூலம் இம்ப்ரஸ் ஏற்பட்டு, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார், அதன்பின், சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில், நாயகியாக நடித்தார்.

அடுத்து, 2019ம் ஆண்டில், தெலுங்கு சினிமாவில், கடலக்கொண்டா கணேஷ் என்ற படத்தில். அதர்வா ஜோடியாக நடித்தார். பொன்ராம், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா, போகரு ஆகிய படங்களில் நடித்தார். இப்போது. நல்ல கேரக்டர்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

மிருணாளினி ரவி
Mrinalini Ravi

மிருணாள் ரவி, சோஷியல் மீடியாவில் இருப்பதால், அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இப்போது, சினிமாவை விட, சமூகவலைதளங்களில் முன்னணி நடிகைகளின் கவர்ச்சி படங்களும், வீடியோக்களும் அதிகமாக வெளிவருகின்றன.

சினிமாவில், கவர்ச்சி எல்லை மீறாமல், ஆபாசமாக மாறாமல் தடுக்க சென்சார் பேசர்டு இருக்கிறது.

மிருணாளினி ரவி
Mrinalini Ravi

ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால், இயன்றவரை கவர்ச்சி வீடியோக்களை, கவர்ச்சி படங்களை பதிவிட்டு, மிருணாளினி ரவி போன்றவர்கள், சூடுகிளப்பி விடுகின்றனர்.

இந்த படங்களிலும், கவர்ச்சியை தூக்கலாக தெரியும் விதமாக தனது கலைத்திறனை காட்டி, எடுத்திருக்கிறார் புகைப்படக் கலைஞர். அம்மாடியோவ் என்கின்றனர் படங்களை பார்த்து மகிழும் ரசிகர்கள்.