“மூட்டு வலி அதிகமா இருக்கா ..!” – முடக்கத்தான் தோசை செய்து சாப்பிடுங்க..!

இன்று பொதுவாகவே அனைவருக்கும் மன அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு காரணம் பணி, வீட்டில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அவர்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் உடல் உழைப்பு இன்மை.

இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்படி மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் உடனே மருந்துகளை உண்ணாமல் இயற்கையான முறையில் மூட்டு வலியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடக்கத்தான் கீரையை வாங்கி வந்து அதை தோசை செய்து சாப்பிடுவதின் மூலம் உங்கள் மூட்டு வலியை விரைவாக கட்டு கொண்டு வர முடியும்.

 அது மட்டுமல்லாமல் இந்த கீரையை நீங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்து வருவதின் மூலம் மூட்டு வலி, முடக்குவாதம் என்ற பிரச்சனைக்கே இடம் இல்லாமல் போகும். அந்த வகையில் இன்று இந்த கட்டுரையில் எப்படி முடக்கத்தான் தோசை செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

முடக்கத்தான் தோசை செய்ய தேவையான பொருட்கள்

1.ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை

2.இட்லி அரிசி அரை கிலோ

---- Advertisement ----

3.கால் கிலோ உளுந்து

4.வெந்தயம் சிறிதளவு

5.உப்பு தேவையான அளவு

6.சீரகம் சிறிதளவு

செய்முறை

முதலில் இட்லி அரிசியை நன்கு கழுவி எடுத்துவிட்டு குறைந்தது 3 மணி முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதைப்போலவே உளுந்தையும் நீங்கள் நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்தது மூன்று மணியிலிருந்து நான்கு மணி நேரம் ஊற போடுங்கள்.

 பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான்கு மணி நேரம் கழிந்த பிறகு நீங்கள் உங்கள் இட்லி அரிசியை கிரைண்டரில் போட்டு எப்போதும் இட்லி அரைக்க கூடிய பக்குவத்தில் அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு உளுந்தையும் போட்டு நீங்கள் ஆட்டும்போது அதனோடு வெந்தயம் மற்றும் முடக்கத்தான் கீரையை சேர்த்து நன்கு அரைத்து விடுங்கள்.

 இது நன்கு அரைந்த பிறகு ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை அதனோடு சேர்த்து விடுங்கள். இவை அனைத்தும் நன்கு அரைந்த பிறகு நீங்கள் இந்த உளுந்து மாவினை அரிசி மாவோடு கலந்து வைத்து விடுங்கள்.

 பிறகு அன்று இரவே நீங்கள் இந்த மாவில் தோசை ஊற்றலாம் அதற்காக தோசை கல்லை அடுப்பில் போட்டு இந்த மாவை எடுத்து அழகான முறையில் தோசையை சுட்டு எடுக்கவும்.

தேங்காய் சட்னி மற்றும் காரச் சட்னி இதற்கு மிகவும் சரியான சைடிஸ் ஆக இருக்கும் இப்போது சுவையான முடக்குவாதத்தை நீக்கி மூட்டு வலிகளுக்கு நிவாரணம் தரும் முடக்கத்தான் தோசை தயார்.

---- Advertisement ----