“டிராவல் செய்வதால் முகம் கருப்பாக மாறுகிறதா..!” – அதை சரி செய்ய எளிய டிப்ஸ்..!

வீட்டிலிருந்தே வெளியே கிளம்பும்போது நீங்கள் மிக அருமையான முறையில் மேக்கப் ஐ போட்டுக் கொண்டு செல்வீர்கள். ஆனால் சில மணி நேரங்களிலேயே நீங்கள் எவ்வளவுதான் மேக்கப் போட்டு இருந்தாலும், உங்கள் பயணத்தின் காரணமாக உங்கள் முகம் பளிச்சு என்று இருப்பது மாறி கருமையான தோற்றத்திற்கு மாறிவிடும்.

இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மனதிலும் ஒருவிதமான அழுத்தத்தை உண்டு பண்ணும். இனிமேல் நீங்கள் எங்கு பயணம் சென்றாலும் உங்கள் முகம் எப்போதுமே பளிச்சென்று இருப்பதற்கு மிகச் சிறப்பான குறிப்புகளை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பயணத்தின் போது முகம் கருமை ஏற்படாமல் இருக்க உதவும் குறிப்புகள்

பயணம் செல்லக்கூடிய சமயத்தில் ஒரு சிறிய பாட்டிலில் காய்ச்சிய பாலை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள். இந்தப் பாலை நீங்கள் பஞ்சில் தொட்டு உங்கள் முகத்தில் துடைத்து வந்தால் போதுமானது. எந்தப் பகுதியில் நீங்கள் சென்றாலும் அது காடு, மலை, கடல், வெயில் என்று இருந்தாலும் உங்கள் முகம் பளிச்சென்று வெண்மையாக எப்போதும் காட்சி அளிக்கும்.

பயணத்தின் போது உங்கள் சருமம் சிறப்பாக இருக்க சிறிய பேஸ் பேக்கை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தில் தேய்த்து சிறிதளவு நீரைக் கொண்டு துடைத்து விடுவதின் மூலம் உங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.

பயணத்தின் போது இடையிடையே நீங்கள் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு வியர்வை அதிகமாக ஏற்படாது. இதன் மூலம் உங்கள் சருமத்தில் ஈரப்பதம் அப்படியே இருப்பதால் முகம் கருப்பாக தெரியாது. மேலும் பிரெஷ் ஆக இருக்கும்.

---- Advertisement ----

எனவே மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பயணத்தின் போது அதனை பயன்படுத்துவதால் கண்டிப்பாக உங்கள் முகம் கருப்பாக மாறாமல் பார்ப்பதற்கு அழகாகவும் பளிச்சென்றும் காட்சியளிக்கும்.

மேலும் இந்த குறிப்புக்களை நீங்கள் பயன்படுத்திப் பார்த்து உங்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகளைப் பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

---- Advertisement ----