Actress | நடிகைகள்
“என் செல்லப்பேரு ஆப்பிள்…” முமைத் கான்-ஐ நினைவிருக்கா..? – இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
தமிழ் திரை உலகில் பிரபலமான கவர்ச்சி நடிகை வலம் வந்தவர் நடிகை முமைத்கான் ( Mumaith Khan ). பல்வேறு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த இவர் கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
Mumaith Khan
பெரும்பாலும் படங்களில் துணை நடிகையாகவும் குத்து பாடல்களுக்கு நடனமாடும் நடிகையாகவும் மட்டுமே தோன்றி வந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தமிழில் பொன்னியின் செல்வன், தலைநகரம், போக்கிரி, மருதமலை, வில்லு, கந்தசாமி, மம்முட்டியான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமாக நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை முமைத் கான் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
Mumaith Khan
பட வாய்ப்புகள் கூட கூட உடல் எடையும் கூடி குண்டாக்கி போன நடிகை முமைத் கான் சினிமாவில் பெரிய தலையீடு இல்லாமல் இருக்கிறார். இடையில் சில பட வாய்ப்புகள் வந்த போதும் அதனை தவிர்த்து விட்டார்.
Mumaith Khan
சமீபத்தில் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தினார்.
Mumaith Khan
தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை முமைத்கானின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு இருக்கிறது.
Mumaith Khan
மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் முமைத் கான் என்று கூறுகிறார்கள். தெலுங்கு தமிழ் என மொழிகளில் பட வாய்ப்புகள் வரும் என காத்திருக்கும் இவருடைய காத்திருப்பு நிறைவேறுமா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.