இயக்குனர் மிஷ்கின்-க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தளபதி ரசிகர்கள்..! – இது தான் காரணமா..?

இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பொழுது நடிகர் விஜயை அவன் இவன் தம்பி என்று ஒருமையில் பேசி இருந்தார்.

அவர் கூறியதாவது தம்பி விஜய் லியோ படத்தை முழுசா பாத்துட்டான். பாத்துட்டு படம் சூப்பரா இருக்குன்னு சொல்லி இருக்கான்.. படம் நல்லா இருக்கும் என்று நடிகர் விஜய்யை உரிமையாக ஒறுமையில் பேசினார்.

இது சில விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆள்திருக்கிறது. எப்படி எங்க தளபதியை நீங்கள் ஒருமையில் பேசலாம் என்று இயக்குனர் மிஷ்கினுக்கு கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

ஏற்கனவே நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் நான் விஜயின் தீவிர ரசிகர் என்று கூறியிருந்தார்.

இதனை கேட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் விஜய் என்று கூறக்கூடாது தளபதி என்று தான் கூற வேண்டும் தலைவரை தளபதி என்று தான் கூற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து அந்த பின் தளபதி என்று திருத்திக் கொண்டார் அந்த பெண்மணி. இப்படி இருக்க தற்பொழுது இயக்குனர் மிஷ்கின் நடிகர் விஜய் ஒருமையில் பேசிவிட்டார் என்று கடுப்பில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி அவர் மரணம் அடைந்து விட்டதாக தகவல்களை பரப்பி வருகின்றனர் சில தளபதி ரசிகர்கள்.

மேலும் மோசமான வார்த்தைகளை சொல்லி திட்டியும் கருத்துக்களை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …