நானே வருவேன்..! – பொன்னியின் செல்வன் முன்பு தாங்குமா..? – படம் எப்படி இருக்கு..!

நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கரின் நீண்ட நாளுக்குப் பின்பு இணைந்து எடுத்து இருக்கக்கூடிய இந்த படம் நானே வருவேன் திரைக்கு வந்தவுடன் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றிருக்கிறது இந்த படத்தை பற்றி ரசிகர்கள் பேசும்போது படம் வேற லெவல் என்று கூறியிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இந்த படத்தில் கதை சென்றிருப்பதாக சில ரசிகர்கள் கூறியிருப்பது  மிகவும் முக்கியமான விஷயம் ஆகும்.

இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கக்கூடிய தனுஷ்  தனது நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். படத்தின் முதல் பகுதியைவிட இரண்டாம் பகுதி மிகவும் விறுவிறுப்பாக செய்வதாக உள்ளது.

 இந்தப்படத்தை பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வெளியிட்டிருக்கிறார்கள் என்ற கருத்துக்கள் இருந்த போதிலும் நல்ல படம் எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் தேடி வந்து பார்ப்பார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இப்படத்தயாரிப்பாளர் பேசியிருந்தார்.

 அடுத்தடுத்த நாட்களில் வெளியாகி வந்திருக்கும் பொன்னியின் செல்வன் மற்றும் நானே வருவேன் திரைப்படங்களை ரசிகர்கள் பாகுபாடு அல்லாமல் பார்ப்பார்கள். மேலும் தனுஷின் ரசிகர்கள் கட்டாயம் தனுஷின் படமான நானே வருவேன் படத்தை பார்த்து விட்டு பின்னர் தமிழரின் பெரும் காவியமான பொன்னியின் செல்வனையும் பார்ப்பார்களாம்.

எனவே அவர்களுக்கு இடையே எந்த ஒரு பாகுபாடும் பிரிவினையும் இல்லை என்பது அவர்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

 மேலும் தனுஷ் ரசிகர்கள் விண்ணைத் தொட கூடிய அளவுக்கு பிரம்மாண்டமான கட்அவுட்கள் வைத்து வெடிகளை வெடித்து முதல் நாள் கொண்டாட்டத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.

 எனவே திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து இந்த படமும் வெற்றி பெறும் என்ற நிலையில்தான் தற்போது படம் சூடுபிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பல தனியார் சேனல்கள் இந்த FDFS கொண்டாட்டத்தை நேரடியாக ஒளிபரப்பினார்கள்.

  தப்பட்டைகள் முழங்க ரசிகர்மன்ற கொடிகள் பறக்க தனுஷின் நானும் வருவேன் மாசாக களமிறங்கி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இனி வரும் நாட்களில் படத்திற்கான வசூல் எவ்வளவு ஃபாக்ஸ் ஆபிஸ் கிட்டை நிகழ்த்தியதா? என்பது விரைவில் தெரியவரும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …