கல்யாணத்தால் வந்த வினை.. இன்னும் அந்த பயம் போகல.. நாதஸ்வரம் காமு உருக்கம்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன சீரியல் நாதஸ்வரம் இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கியிருந்தார் .

இந்த தொடரில் பூவிலங்கு மோகன், திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி பாசம் மாமியார் மருமகள் பிரச்சனை தங்கையின் பாரத்தை தாங்கும் அண்ணன் என,

குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இடத்தைப் பிடித்தது.

நாதஸ்வரம் சீரியல்:

இந்த சீரியலில் காமு என்ற கேரக்டரில் அடுத்த மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் தான் நடிகை பென்சி பிரிங்க்லின்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்வில் நடந்த பல கஷ்டங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

--Advertisement--

குறிப்பாக திருமண வாழ்க்கை தனக்கு எவ்வளவு பிரச்சனையாக அமைந்துவிட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.

நாதஸ்வரம் காமு:

சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் சிறந்த நடன கலைஞராகத்தான் இருந்தேன். நடனம் ஆடுவது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் சின்ன வயசுல இருந்து அதில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

குறிப்பாக குச்சிப்புடி பரதநாட்டியம் வெஸ்டர்ன் உள்ளிட்ட டான்ஸ் எல்லாம் நான் முறையாக கற்று தெரிந்து இருக்கிறேன்.

என்னுடைய அப்பாவுக்கும் சினிமாவில் மீடியாவில் வரவேண்டும் என அவருக்கு அதிக ஆசை இருந்தது. அவர் இந்தியன் பேங்க் மேனேஜராக இருந்தாலும் கூட அவ்வப்போது ஆடிஷன்களில் பங்கேற்று வாய்ப்பு தேடி வந்தார்.

சீரியலில் வாய்ப்பு:

அப்போது ஒரு சமயம் அவர் என்னை கூட்டிக் கொண்டு சென்றபோது தான் அங்கே ஒருத்தர் என்னை பார்த்துவிட்டு உங்கள் மகள் குழந்தை நட்சத்திரமாக சீரியல் ஒன்றில் நடிக்க வேணும் என கேட்டார்.

அப்போதிலிருந்து என்னுடைய திரை பயணம் ஆரம்பித்தது. அன்றிலிருந்து எனக்கும் அதில் அதிக ஆர்வம் இருந்தது.

பின்னர் உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் செலக்ட் ஆகி விட்டேன்.

எனக்கு கிளாசிக் மட்டும் தான் தெரியும் நடனத்தில் வெஸ்டர்ன் நடனம் அவ்வளவாக தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டு நடனம் ஆட வேண்டும் என ஆர்வம் அதிகம் இருந்தது .

ஆனால் எனது உடல் எடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்து கிண்டல் அடித்து வந்தார்கள்.

இருந்தாலும் நான் முயற்சி கைவிடாமல் தொடர்ந்து நடனத்தில் கவனத்தை செலுத்தி வந்தேன்.

அதன் பின்னர் தொகுப்பாளர தொகுப்பாளராக பணியை தொடங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

அப்படித்தான் நான் நாதஸ்வரம் சீரியலில் நடிக்க தொடங்கி மக்கள் இடையே பிரபலமானேன். இதனிடையே எனக்கு அரேஞ்ச் மேரேஜ் நடைபெற்றது.

வேதனை கொடுத்த கல்யாண வாழ்க்கை:

ஆனால் அந்த திருமணம் வாழ்க்கை எனக்கு சரிவர அமையவில்லை. ஆம் என்னுடைய கணவருடன்,

எனக்கு பல பிரச்சனைகள் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அவரை விவாகரத்து செய்துவிட்டேன்.

விவாகரத்து செய்வதற்கு முன்னர் எனக்கு அந்த முடிவு எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

காரணம் அது எந்த அளவுக்கு என்னுடைய தங்கை மற்றும் அம்மாவை பாதிக்கும் என நான் யோசித்தேன்.

பிறகு என் அம்மா அப்பாவிடம் தெளிவாக கூறி புரிய வைத்து விட்டு பின்னர் நான் அவரை விவாகரத்து செய்தேன்.

கணவருடன் விவாகரத்து:

ஆனால் விவாகரத்துக்கு பிறகு கூட என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. அந்த வழியில் இருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை.

அதன்பின் எனக்கு இன்னொரு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவும் பிடிக்கவில்லை அது மெண்டல் பிரஷராக இருந்தது.

இதனால் தொடர்ந்து நான் பிஸியாக என்னுடைய வேலையில் அதிக கவனம் செலுத்தி அதிலிருந்து வெளியே வர கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்தேன்.

அப்படித்தான் சீரியல்களில் நடித்தேன் மீண்டும் திருமுருகன் சார் இயக்கத்தில் சீரியல்களில் நடிக்க வேண்டும் என ஆசை எனக்கு அதிகமாக இருக்கிறது என கூறினார்.