அதே நாள்.. நாக சைதன்யா.. சோபிதா நிச்சயதார்த்தம் எதார்த்தமா நடக்கல.. சமந்தாவுக்கு நடக்கும் கொடுமை..!

அதே நாள்.. நாக சைதன்யா.. சோபிதா நிச்சயதார்த்தம் எதார்த்தமா நடக்கல.. சமந்தாவுக்கு நடக்கும் கொடுமை..!

தமிழ் சினிமாவில் முக்கியமான வரவேற்பை பெற்ற நடிகைகளில் நடிகை சமந்தாவிற்கு பெரிய இடம் உண்டு என்று கூறலாம். தென்னிந்திய அளவிலேயே அதிக பிரபலமான நடிகையாக சமந்தா இருந்து வருகிறார்.

ஆரம்பத்தில் அவர் நடித்த மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் வரவேற்பை தரவில்லை என்றாலும் கூட ராஜமௌலி இயக்கத்தில் சமந்தா நடித்த நான் ஈ திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

ராஜமௌலி படத்தில் வந்த வரவேற்பு:

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சமந்தா தொடர்ந்து திரை உலகில் பிரபலமான நடிகையாக மாறினார். ராஜமௌலியை பொறுத்தவரை அவர் ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவார். அதனாலயே நான் ஈ திரைப்படத்திற்கு தெலுங்கில் அதிக வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து சமந்தாவிற்கும் தெலுங்கில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே கிடைத்தது. சினிமாவிற்கு வந்த காலம் முதலே கவர்ச்சியாக நடிப்பதற்கு சமந்தா கவலைப்பட்டதே கிடையாது. மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி திரைப்படங்களில் கூட சமந்தாவிற்கு கொஞ்சம் கவர்ச்சியான காட்சிகள் இருந்தன.

அதே நாள்.. நாக சைதன்யா.. சோபிதா நிச்சயதார்த்தம் எதார்த்தமா நடக்கல.. சமந்தாவுக்கு நடக்கும் கொடுமை..!

இதனால் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து அங்கேயும் வரவேற்பை பெற்றார் சமந்தா. இந்த நிலையில்தான் அவருக்கும் தெலுங்கில் பிரபலமான நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

காதல் திருமணம்:

அதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகு சில காலங்கள் இவர்களது திருமண வாழ்க்கை நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

எதனால் இந்த விவாகரத்து பிரச்சனை உண்டானது எனப் பார்க்கும் பொழுது சமந்தா சினிமாவில் நடிப்பது நாக சைதன்யாவிற்கு பிடிக்கவில்லை என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தாற் போல விவாகரத்து ஆன உடனே உச்ச பட்ச கவர்ச்சியில் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் நடனமாடியிருந்தார் சமந்தா.

அதே நாள்.. நாக சைதன்யா.. சோபிதா நிச்சயதார்த்தம் எதார்த்தமா நடக்கல.. சமந்தாவுக்கு நடக்கும் கொடுமை..!

இதை அவர் நாக சைதன்யாவை பழிவாங்கவே செய்கிறார் என்றெல்லாம் அப்பொழுது பேச்சுக்கள் இருந்து வந்தது. இந்த நிலையில் விவாகரத்து ஆன பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

அதனை தொடர்ந்து இன்று காலை அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக நாகார்ஜுனா அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார் அதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நாகார்ஜுனா ”சோபிதாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதை அறிவிப்பதில் சந்தோஷம் அடைகிறேன். இன்று காலை 9:42க்கு இந்த நிச்சயதார்த்தம் நடந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நிச்சயதார்த்தம் நடந்த இந்த நாளில்தான் பல வருடங்களுக்கு முன்பு சமந்தா தன்னுடைய காதலை நாக சைதன்யாவிடம் கூறினார் என்று ஒரு பேச்சு கிளம்பி இருக்கிறது. எனவே சமந்தாவை வெறுப்பேத்துவதற்காகவே இவர்கள் இந்த நாளை நிச்சயதார்த்தத்திற்கு தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.