தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மனைவி மீண்டும் நடிக்க வருகிறார்களா? என்ன தான் அமலா சொல்லிக்கிறார்?

 1990-களில் இளைஞர்களின் மனம் கவர்ந்த கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை அமலா இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.

 கமலஹாசன் ஜோடி இணைந்து அமலா நடித்த படங்கள் பார்க்க பார்க்க அனைவரையும் கவரும் வண்ணம் மிகவும் அருமையாக இருந்தது. 

திருமணமான பின்னர் அவரது குடும்பத்தை கவனித்து வந்தார். அவரது மருமகள் தான் சமந்தா என்பதும் தற்போது தன் மகனுக்கும் சமந்தாவிற்கும் விவாகரத்து ஆன விஷயம் அனைவரும் அறிந்ததே.

 30 ஆண்டுகள் கழித்து  அமலா மீண்டும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறா.ஆம் இவர் “கணம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகன் சர்வானந்தின் அம்மாவாக அவர் நடிக்கிறார்.

 அட பூஜைக்காக சென்னை வந்திருந்த போது இவரிடம் பலவிதமான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு அவர் 30 ஆண்டுகளாக நான் வீட்டில் சும்மா இருக்கவில்லை பொது சேவைகள் பல செய்து வந்ததாக தெரிவித்தார்.

கண பட இயக்குனர் ஸ்ரீகாந்த் கதை சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது.அத்துடன் கதையும் பிடித்திருந்தது. எனவே தான் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். அம்மா கேரக்டர் என்றாலும் அது மிகவும் ஒரு முக்கியமான ரோல் ஆக கருதப்பட்டதால் நான் நடிக்க முன் வந்தேன்.

மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதில் குறிப்பாக அவருக்கு பிடித்த படமாக “மைதிலி என்னை காதலி” படத்தை கூறியிருந்தார். அம்மா வேடத்தில் நடிக்க தயங்க வில்லை என்றும் அந்த படத்தில் நடிக்கும்போது தன்னுடைய மகன் அகில் ஞாபகம் வந்ததாகவும் கூறினார். பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்குப் பின்பு குண்டாகி விடுகிறார்கள். ஆனால் இன்னும் இவர்  30 வருடங்களுக்கு முன்பு எப்படி உடலை வைத்து இருந்தாரோ அதேபோல் வைத்து பராமரித்து இருந்தது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அக்னி நட்சத்திர படத்தில் தான் நடிப்பது தன்னால் இன்றுவரை மறக்க முடியாத நினைவுகளாக உள்ளது என்று பெருமிதத்தோடு கூறினார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …