நீ காமெடியன்.... நீ நடிச்சா சிரிச்சிடுவாங்க... நம்பாத இயக்குனருக்கே ஷாக் கொடுத்த நாகேஷ்!

நீ காமெடியன்…. நீ நடிச்சா சிரிச்சிடுவாங்க… நம்பாத இயக்குனருக்கே ஷாக் கொடுத்த நாகேஷ்!

நகைச்சுவை நாயகன் நாகேஷ் திரைப்படத்துறையில் காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார். இவர் இதுவரை தெலுங்கு , தமிழ், மலையாளம் ஹிந்தி ,கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் நாகேஷ்:

நீ காமெடியன்.... நீ நடிச்சா சிரிச்சிடுவாங்க... நம்பாத இயக்குனருக்கே ஷாக் கொடுத்த நாகேஷ்!

ஹாலிவுட் நடிகரான ஜெர்ரி லூயிஸின் சாயலில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி நடித்த வந்த நாகேஷ். தமிழ்நாட்டு ஜெர்ரி லூயிஸ் என புகழ் பாராட்டப்பட்டார்.

தனது தந்தை பணியாற்றிய ரயில்வே துறையில் எழுத்தாளராக பணிபுரிந்து அதன் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையால் திரைக்கு சென்று பிரபலமான நகைச்சுவை நடிகராக பெரும் புகழ்பெற்றவர் தான் நாகேஷ்.

சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் பல்வேறு நாடகங்களில் நடித்து வந்த இவர் 1959 ஆம் ஆண்டு வெளிவந்து “தாமரைக் குளம்” என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார்.

பின்னர் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களை ஏற்றி நடித்து வந்த அவர் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.

நீ காமெடியன்.... நீ நடிச்சா சிரிச்சிடுவாங்க... நம்பாத இயக்குனருக்கே ஷாக் கொடுத்த நாகேஷ்!

பெரும்பாலான திரைப்படங்களில் இவருக்கு ஜோடியாக ஆட்சி மனோரமா நடித்திருக்கிறார்கள். இருவரது காம்பினேஷன் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும்.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நடித்ததற்காக மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக நாகேஷ் சிறந்து விளங்கி வந்தார்.

சீரியசான கட்சியில் நடிக்க சான்ஸ் கேட்ட நாகேஷ்:

தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு மரணித்து விட்டார். இந்த நிலையில் தொடர்ச்சியாக காமெடியாக நடிகராக நடித்து வந்த நாகேஷ் ஒரு சீரியஸான ஒரு எமோஷனலான காட்சியில் நடிக்க இயக்குனரிடம் கேட்டும் மறுத்துவிட்டார்களாம்.

அதைப்பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் 1963ஆம் ஆண்டு ஏசி திரிலோக சந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “நானும் ஒரு பெண்”.

இந்த திரைப்படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி , ரங்காராவ், எம் ஆர் ராதா, நாகேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .

நீ காமெடியன்.... நீ நடிச்சா சிரிச்சிடுவாங்க... நம்பாத இயக்குனருக்கே ஷாக் கொடுத்த நாகேஷ்!

இந்த படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. அது மட்டுமில்லாமல் இந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் நாகேஷ் விஜயகுமாருக்கு அண்ணனாக நடித்திருப்பார். மிகவும் வெகுலியாக காமெடியான கதாபாத்திரத்தில் வந்து போவார் .

அப்படி இருக்கும் இந்த படத்தில் முக்கியமான ஒரு சீரியஸான காட்சியில் நாகேஷ் நடிக்க கேட்டிருக்கிறார். அதாவது அந்த படத்தில் விஜயகுமாரியின் திருமணம் நிற்கும் சூழல் ஏற்படுகிறது.

அந்த காட்சியில் நடிக்க மனோரமா ,விஜயகுமாரி மற்றவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள் . அந்த சமயத்தில் நானும் அந்த காட்சியில் நடிக்கிறேன்.

விஜயகுமாரின் அண்ணனாக நான் இதில் நடித்திருக்கிறேன். ஒரு தங்கைக்கு கல்யாணம் நிற்கும் சமயத்தில் கட்டாயம் நான் இந்த காட்சியில் இடம்பெற வேண்டும் என நாகேஷ் கூறி இயக்குனரிடம் தனக்கு காட்சி ஒதுக்குமாறு கேட்டிருக்கிறார் .

நீ நடிச்சா சிரிச்சிடுவாங்க…

ஆனால் இயக்குனரோ நீ ஒரு காமெடி நடிகன் உன்னால் அந்த காட்சியில் நடிக்க முடியாது. அப்படியும் நீ நடித்தால் எல்லாரும் சிரிச்சிடுவாங்க என கூறி இருக்கிறார் ..

மக்கள் கட்டாயம் இந்த காட்சியில் நீ நடித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறி இருக்கிறார். ஆனால் நாகேஷ் ஒரு வாய்ப்பு கொடுங்கள் நான் நடித்து காட்டுகிறேன் என கூறிவிட்டு டயலாக் எதுவுமே பேசாமல் அவ்வளவு தத்ரூபமாக அந்த காட்சியில் நடித்து அசத்தி இருக்கிறார்.

நீ காமெடியன்.... நீ நடிச்சா சிரிச்சிடுவாங்க... நம்பாத இயக்குனருக்கே ஷாக் கொடுத்த நாகேஷ்!

அவர் நடித்து முடித்த உடனே கட்டு என சொன்ன இயக்குனர் அங்கிருந்த கேமரா மேன் செட்டில் இருந்தவர்கள் எல்லோரையும் கைதட்டி நாகேஷ் பாராட்டக் கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில்தான் தான் வெறும் காமெடி நடிகன் மட்டும் இல்லை…. எந்த கதாபாத்திரங்களை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு நடிக்கும் திறமையை என்னிடம் இருக்கு என்பதை வெளிப்படுத்தினார் நாகேஷ்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் எமோஷனலான கதாபாத்திரங்களில் கூட நடித்து அசத்தியிருக்கிறார் நாகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.