பிரபல சீரியல் நடிகையான நட்சத்திரா நாகேஷ் சீரியல் நடிகையாக ஆவதற்கு முன்னர் தொலைக்காட்சி தொகுப்பாளராக இவர் பணியாற்றி வந்தார்.
சென்னை சேர்ந்த இவர் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
தொகுப்பாளினியாக நக்ஷத்திரா நாகேஷ் :
மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் நட்சத்திரா.
அத்துடன் சன் குடும்பம் விருதுகள், தென்னிந்திய இன்டர்நேஷனல் போன்ற விழாக்களுக்கு விருது வழங்குபவராகவும் பணி புரிந்துள்ளார்.
இவர் முன்னதாக வானவில் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமானார். இதனிடையே பட வாய்ப்புகள் கிடைக்க சேட்டை படத்தில் நடித்து நடிகையானார்.
சில திரைப்படங்களில் நக்ஷத்திரா:
மேலும் வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, இந்திரஜித் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த என் இனிய பொன் நிலாவே, காதல் ஒன்று கண்டேன் உள்ளிட்ட குறும்படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த குறும்படங்களாக பார்க்கப்பட்டது.
பிரபலமான நடிகையாக இருந்து வந்த போது குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்த அசத்தி வந்தார்.
சீரியல்களில் நக்ஷத்திரா:
நிகழ்ச்சி தொகுத்து வழங்குதல் , சீரியல் , திரைப்படம் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தவறாமல் நடித்து வந்தார் நட்சத்திரா நாகேஷ்.
வாணி ராணி, நான் காதலால் அவதிப்படுகிறேன், லட்சுமி ஸ்டோர்ஸ் , ரோஜா , மின்னலே, நாயகி, தமிழும் சரஸ்வதியும் , பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.
இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோயினாக நடித்து சீரியல் உலகில் ஹீரோயினார். இப்படி பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வரும் நட்சத்திரா நீண்ட நாள் நண்பரும் காதலரும் ஆன ராகவ் என்பவரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக் கொள்ளும் க்யூட்டான வீடியோ புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
செல்லத்த.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?
இந்த நிலையில் திடீரென நட்சத்திர நாகேஷ் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்த பலரும் எல்லோரும் என்ன இது அவங்களா இவங்க?
இவ்வளவு குண்டாகிட்டாங்களே என பார்த்து விழி பிதுங்கி போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் இதை பார்த்த நெட்டிசன்ஸ்… அடேய் என்னடா பண்ணினீங்க தங்கத்தை…. புசுபுசுன்னு இப்படி ஊதி போய்ட்டாங்க எனக்கு கிண்டல் அடித்து கமெண்ட் செய்து இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.
உடல் எடை கூடி குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள சீரியல் நடிகை நக்ஷத்ராவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.