Window இல்லாத Van-ல் அதை பண்ண சொன்னங்க.. – ரகசியம் உடைத்த நக்‌ஷத்ரா நாகேஷ்..!

பிரபல நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் கூறியதாவது, சினிமாவில் அறிமுகமான புதிதில் என்னுடைய முதல் படம் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சேட்டை இந்த திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.

இந்த படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு கிடைத்த வசதிகள் பார்த்துவிட்டு இனிமேல் சினிமா தான் என்னுடைய வாழ்க்கை என்று முடிவு எடுத்தேன்.

அந்த அளவுக்கு நடிகர்களை படக்குழு பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவையான சாப்பாடு அது இது என ஒரே அமர்க்களமாக இருந்தது.

பெரிய சாப்பாட்டு கேரியர் வருகிறது.. அதை திறந்தாள் மட்டன் குழம்பு இருக்கிறது நண்டு குழம்பு, மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா அது இது என அங்கு இல்லாத ஐட்டங்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

எனக்கும் என்னுடைய அம்மாவுக்கு மட்டும் இவ்வளவு சாப்பாடு. அதன் பிறகு மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தில் இப்போது என்ன வேண்டும் என்று யாரும் கேக்கவில்லை என்று நான் பேசிக் கொண்டிருந்தேன்.

இதை படப்பிடிப்பு தளத்தில் யாரோ கேட்டுவிட்டு அந்த அவங்க கேக் கேட்கிறார்கள் போல் தெரிகிறது என்று கூறி கேக் வாங்கிட்டு வந்து கொடுத்தார்கள். என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

அந்த அளவுக்கு பத்திரமாக அந்த படக்குழு எங்களை பார்த்துக் கொண்டது. ஆனால், அதற்கு அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும் பொழுது உடை மாற்றுவதற்கு கூட சரியான இடமில்லாத ஒரு நிலை இருந்தது.

அப்போதுதான் புரிந்தது சினிமா என்றால் மேலும் கீழும் இருக்கும். சினிமா என்றால் கஷ்டம் இருக்கும். ஒரே படத்தில் நடித்துவிட்டு சினிமா என்றால் இப்படித்தான் என்று முடிவு செய்துவிட்டேன்.

ஏனென்றால் சேட்டை படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் முன்னணி நடிகர்கள் அவர்களுக்கு உண்டான வசதியை தான் எனக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்த படங்களில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்தேன்.

அங்கே வந்து உடைமாற்ற கூட இடம் இருக்காது. ஒரு வேனில் என்னை உடைமாற்றிக் கொண்டு வர சொன்னார்கள்.

அதில் ஜன்னல் எதுவும் இல்லை ஒரு முன்புற கண்ணாடி மட்டும் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு அதுக்கு முன்னால் ஒரு நான்கு ஐந்து பேர் சேர் போட்டு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் நான் உள்ளே இருப்பதை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் உடை மாற்ற போகிறார் திரும்பி உட்கார வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களிடம் இல்லை. சினிமாவில் இதெல்லாம் கற்றுக் கொண்டேன் என்று பேசியிருக்கிறார் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …