அது சாதாரணம்.. சினிமாவில் அதுவும் ஒரு பகுதி..! – போட்டு உடைத்த நடிகை நமீதா..!

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் பாம்பே மாடல் அழகி நமீதா.

முதல் திரைப்படத்திலேயே இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தொடர்ந்து படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெள்ளை சிலுக்கு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். தொடர்ந்து கிளாமரான காட்சிகளில் கவர்ச்சியான வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி பயங்கரமாக குண்டாகி போனார்.

அதனால் அவருடைய பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நமீதா சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகைகளை பற்றி கிசுகிசுக்கள் அதிகமாக வருகிறது. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்விக்கு பதில் அளித்தார்.

கிசுகிசு என்பது எல்லா துறையிலும் இருக்கிறது. நீங்கள் ஒரு ஐடி துறையில் வேலை பார்க்கலாம் அல்லது வேற ஏதாவது தொழில் இருக்கலாம். அங்கே கிசுகிசு இருக்கும், ஆனால், அவர்களைப் பற்றிய கிசுகிசு அந்த குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே நின்றுவிடும்.

ஆனால், சினிமா என்பது பெரிது அது ஒரு மிகப்பெரிய மீடியா நேரடியாக மக்களிடம் தொடர்புகள் இருக்கக்கூடியது. எனவே சினிமாவில் வரக்கூடிய கிசுகிசுக்கள் கொஞ்சம் பெரிதாக பேசப்படுகிறது.

அதில் உண்மை இருக்கலாம் அல்லது உண்மையும் பொய்யும் கலந்து இருக்கலாம் சுத்தமாக பொய்யாகவும் இருக்கலாம் கிசு கிசு என்றால் உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் அவ்வளவுதான். வேற எதுவும் கிடையாது.

இது சினிமாவில் ஒரு அங்கம் இது தமிழ் சினிமாவில் மட்டும்தான் இந்திய சினிமாவில் மட்டும்தான் இருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுதும் உள்ள சினிமா பிரபலங்களுக்கு இடையே இந்த கிசு கிசு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

கிசுகிசு என்பது சினிமாவின் ஒரு அங்கம் அதெல்லாம் சாதாரணமான விஷயம் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு இருக்காமல் அது புரிந்து கொள்வார்கள் புரிந்து கொள்ளட்டும் என்று கடந்து விட்டு சென்றுவிட வேண்டும் அதைத் தாண்டி கிசுகிசுப்பு ஆக நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என போட்டு உடைத்துள்ளார் நமீதா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …