Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஒரு படத்துல நடிக்கணும்ன்னு சொல்லி கூட்டிகிட்டு போனாங்க.. ஆனா.. நமீதா வெளியிட்ட பகீர் தகவல்..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை நமீதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற படங்களில் அதிக அளவு கிளாமர் காட்டி நடித்திருக்கிறார்.


திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சில தொலைக்காட்சி நிகழ்வுகளில் நடுவராக பணி புரிந்து இருக்கும் இவர் குறிப்பாக மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

நடிகை நமீதா..

நடிகை நமீதா சூரத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்திய போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்ததை அடுத்து தெலுங்கில் காதல் திரைப்படமான சொந்தம் என்ற படத்தில் 2002-ஆம் ஆண்டு திரையுலகுக்கு நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை நமீதா தமிழில் எங்கள் அண்ணா என்ற படத்தில் தான் முதன் முதலில் அறிமுகம் செய்து அறிமுக நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

---- Advertisement ----


இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல விளம்பர படங்களிலும் நடித்திருக்க கூடியவர் ஆரம்பத்தில் ஹிமானி கிரீம், அருண் ஐஸ் கிரீம், மாணிக்கந்த் குட்கா போன்ற விளம்பரங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இவர் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பி விளம்பரம் ஒன்று அனைவரையும் மச்சான் என்று அழைப்பதின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியாகவும் கனவு கன்னியாகவும் விளங்கியவர்.

ஒரு படத்துல நடிக்க கூட்டிட்டு போயி..

இந்நிலையில் நடிகை நமீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பொழுது தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் உங்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி அழைத்துச் சென்றார்கள். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

ஆனால் நடிகர் தனுஷை படப்பிடிப்பு தளத்தில் பார்க்கவே முடியவில்லை. ஒரு வேளை தனுஷின் கதாபாத்திரம் தனியாக படம் பிடிக்கப்படுமோ என்று நினைப்பிலிருந்து ஒரு கட்டத்தில் எனக்கு நிஜமாகவே தனுஷ் படம் தானா என்று சந்தேகம் தோன்றியது.


எனவே படக்குழு இடம் சென்று நேரடியாக இது குறித்து கேள்வி எழுப்பினேன். அப்போது தான் எனக்கு இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவில்லை என்றே தெரிந்தது என பகீர் கிளப்பி இருக்கிறார்.

அது மட்டும் அல்ல ஆரம்ப காலத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூட்டி செல்வார்கள்.

பகீர் தகவலை சொன்ன நமிதா..

அங்கு சென்ற பிறகு தான் இந்த உடையை அணிந்து கொண்டு நடனம் ஆட வேண்டும் என்று கூறுவார்கள். நான் முடியவே முடியாது என்று கூறுவேன். அதன் பிறகு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நடிக்க வைத்து விடுவார்கள்.

இப்படி தான் நிறைய படங்களில் நான் நடிக்க தவறி இருக்கிறேன். நான் ஆரம்பத்தில் கவர்ச்சியான ஹீரோயினாகத் தான் வலம் வந்து கொண்டிருந்தேன். என்றாலும் கூட அப்போதும் படு மோசமான கவர்ச்சியான உடைகளை எல்லாம் அணிந்து கொண்டு நடனமாட சொல்லி இருக்கிறார்கள்.


அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு நீங்கள் பார்ப்பது தானே என்று நான் ஏற்றுக்கொண்ட அணிந்த ஆடைகள் நீங்கள் பார்ப்பதை விடவும் மோசமான ஆடைகள் எல்லாம் கொடுத்து அணிய சொல்லியிருக்கிறார்கள்.அவற்றையெல்லாம் நான் முடியாது என தவிர்த்து விடுவேன் என கூறியிருக்கிறார் நடிகை நமீதா.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியில் உறைந்து இருப்பதோடு இப்படி எல்லாம் சினிமா துறையில் நடப்பது சகஜம் எனினும் இது போன்ற விஷயங்களை தற்போது தான் அனைவரும் ஓப்பனாக பகிர்ந்து வருகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top