ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அழகி பட நடிகை..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில், சில படங்களில் நடித்தாலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனவர்களாக, கவனிக்கத்தக்க நடிகைகளாக மாறிவிடுகின்றனர்.

அந்த ஓரிரு படங்களில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம், அவருடைய நடிப்பின் வெளிப்பாடு, அவர்களின் ஏதோ ஒரு வசீகர தன்மை, அம்சத்தால் ரசிகர்கள் அவர்களிடம் தங்கள் மனதை தந்து விடுகின்றனர்.

நந்திதா தாஸ்

நடிகை நந்திதா தாஸ் தமிழில் மிக சொற்பமான படங்களில் தான் நடித்தார். குறிப்பாக நடிகர் பார்த்திபன் நடிப்பில், தங்கர்பச்சான் இயக்கத்தில் அழகி என்ற படத்தில், தனலட்சுமி என்ற கேரக்டரில் நந்திதா தாஸ் நடித்திருந்தார். இந்த முதல் படத்திலேயே அவர் பெருமளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் நீர்ப்பறவை என்ற படத்தில், அவர் நடித்திருந்தார். இதற்கிடையே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்திலும், நந்திதா தாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு நந்திதா தாஸ்க்கு நடிகை சுகன்யா பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

--Advertisement--

நடிகை மற்றும் இயக்குனர்

நடிகை நந்திதா தாஸ், நடிகை மட்டுமல்ல அவர் டைரக்டராகவும் இருந்திருக்கிறார். கடந்த 1969 ஆம் ஆண்டில் பிறந்த நந்திதா தாஸ் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி, ஒரியா மற்றும் கன்னடம் என பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு மொழி படங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டால்…

இதில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த பயர், 1998 ம் ஆண்டில் வெளிவந்த எர்த், மற்றும் பாவன்டர், அடுத்து 2002-ல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால், அதே ஆண்டில் வெளிவந்த அழகி போன்ற படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

20 விருதுகளை பெற்ற ஃபிராக் படம்

நந்திதா தாஸ் இயக்கிய ஃபிராக் என்ற படம் டொரொண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 20க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது. இவர் இரண்டு இயக்கிய இரண்டாவது படம் மண்டோ.

நந்திதா தாஸ் எழுதிய முதல் புத்தகம், மான்டோ அண்ட் ஐ. அவருக்கு இப்போது 55 வயதாகிறது. முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 2வது கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

நந்திதா தாஸ் போன்ற நடிகைகள், திரை ஆளுமை மிக்க கலைஞர்களாக தங்களை வெளிப்படுத்துகின்றனர். தமிழிலும் அப்படி சில நடிகைகள் இருந்தாலும், அவர்களால் பெரிய அளவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, தமிழ் சினிமாவின் வரைமுறைகள் அனுமதிப்பதில்லை.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நந்திதா தாஸின் சமீபத்திய அவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இது நந்திதா தாஸ்தானா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு, அவர் அடையாளமே மாறிப் போய் முகம் சுருங்கி போய், மிகவும் விகாரமாக மாறியிருக்கும் அவரை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்

அடையாளம் தெரியாமல் மாறிய அழகி

தங்கர்பச்சான் இயக்கிய அழகி படத்தில், நந்திதா தாஸ் பார்த்தவுடன் மனதை கொத்தி விடும் அழகில், ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஆனால் இப்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அழகி பட நடிகை நந்திதாஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள், ரசிகர்களை ஷாக் அடையச் செய்திருக்கிறது.