2 மணிநேரம் 2 நிமிடங்கள் ஓடும்… “நானே வருவேன்” தனுஷ் நடிக்கும் படத்தில் அண்ணன் செல்வராகவனுக்கு வெயிட்டான ரோல்!

நடிகர் தனுஷின் விவாகரத்துக்கு பிறகு கிடைத்த தோல்விகளுக்கு பதிலடி தரும் வகையில் தற்போது வெளிவந்த திருச்சிற்றம்பலம் சக்கைபோடு போட்டு மீண்டும் அவருக்கு ஒரு ஏற்றத்தை தந்தது. இதனை அடுத்து தன் அண்ணனோடு கைகோர்த்து நானே வருவேன் என்ற படத்தில் மிக பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

 கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் இந்துஜா, யோகி பாபு, ஜெர்மன் நாட்டு நடிகை எல்லிஅவ்ர்ராம் உள்ளிட்டோர் முக்கி வேடங்களில் நடித்துள்ளனர்.  மேலும் சாணி காகிதம் டீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடிகராக அவதாரம் எடுத்த தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறாராம். சோமராஜன் என்று பெயரிடப்பட்டிருக்கும் கூடிய இந்த கேரக்டர் மிகவும் வெயிட்டான கேரக்டர் ஆகவும் மற்றவர்கள் பேசும் படி இருக்கக்கூடிய கேரக்டராக செல்வராகவனுக்கு அமையும்.

 அப்போதுதான் இந்தப் படத்தின் ஆக்ஷன் மற்றும்அட்வென்சர் கலந்த டீசர் வெளியிடப்பட்டது .இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் படத்தை திரையில் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 செல்வராகவன் இயக்கும் இந்தப் படமானது தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி இதை நிச்சயமாக வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. மேலும் தனுஷ் வாத்தி படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

 இந்த படமானது சுமார் 2 மணிநேரம் 2 நிமிடங்கள் ஓடும் என ரன்னிங் டைம்  கருத்து கூறி இருப்பதோடு இதற்கு யுஏ சான்றிதழை சென்சார் போர்டு கொடுத்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ரன்னிங் டைம் மிகவும் குறைவாக உள்ளது என்று வருத்தப்பட்டாலும் விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படம் பட்டாசாய் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே செல்வராகவன் தனுஷ் காம்பினேஷன் என்றால் சக்கை போடு போடும் இந்த படமும் அந்த வரிசையில் கூட செல்வராகவனும் நடித்து இருப்பதால் ஒரு படி மேல் இதன் வெற்றி அமையும் வசூலை வாரிக் குவிக்கும் என்று ரசிகர்கள் இப்போது நானே வருவேன் படத்தை கொண்டாடத் தொடங்கி விட்டார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …