Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கை விரித்த மருத்துவர்கள்.. மகன் உயிரை காப்பாறியவருக்கு நெப்போலியன் கொடுத்த பரிசை பாருங்க..!

நடிகர் நெப்போலியனின் இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக நெப்போலியன் என்று தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்ட இவர் தென்னிந்திய திரை உலகில் அற்புதமான நடிகராக திகழ்கிறார்.


இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்த இவர் 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார்.

நடிகர் நெப்போலியன்..

இதனை அடுத்து இவர் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் இது வரை மொத்தம் எழுவதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமானது 1991 ஆம் ஆண்டு வெளி வந்தது.

இதனை அடுத்து சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படத்தில் 1994-ஆம் ஆண்டு நடித்த இவர் தனது அபார நடிப்பு திறனை இந்த படத்தில் காட்டியதை அடுத்து பல பட வாய்ப்புக்களை பெற்றார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த கிழக்குச் சீமையிலே, விருமாண்டி, தசாவதாரம் போன்ற படங்கள் திரை உலகம் உள்ளவரை இவரது புகழை சொல்லக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

--Advertisement--


தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறி இருக்கும் நடிகர் நெப்போலியன் தனது மகன் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து தனது மகனின் நலனுக்காக அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.

கை விரித்த மருத்துவர்கள்..

நெப்போலியனின் மகன் தனுஷ் தசை சிதைவு என்கின்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு நான்கு வயது இருக்கும் போதே கண்டுபிடிக்கப்பட்டாலும் பத்து வயது ஆன நிலையில் தனுஷால் நடக்க முடியாமல் போனது.

மேலும் தனுஷ் 17 வயது வரை தான் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் எப்படியாவது தன் மகனை காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையை நெப்போலியன் கொண்டு இருந்தாலும் பல மருத்துவர்கள் அது சாத்தியம் இல்லை என கை விரித்து விட்டார்கள்.

பத்து வயதிலேயே தன் மகனால் நடக்க முடியாமல் போனதை அடுத்து அவரது மனைவிக்கு பயம் அதிகரித்ததை அடுத்து உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளை தேடி சிகிச்சை செய்து வந்திருக்கிறார்.


கடைசியாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூர் என்ற கிராமத்தில் பரம்பரையாக நாட்டு வைத்தியம் செய்து வரும் ஒருவனிடம் சென்று தன் மகனுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

நெப்போலியன் கொடுத்த பரிசு..

அதற்காக அந்த ஊரிலேயே அவர் தங்கி சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மருத்துவர்கள் நடக்கவே மாட்டான் என சொன்ன தனுசை நாட்டு வைத்தியத்தின் மூலம் படிப்படியாக நடக்க வைத்திருக்கிறார்.

இந்த சமயத்தில் இவர் மத்திய அமைச்சராக இருந்ததால் இந்த சிகிச்சைகளைப் பற்றி பத்திரிகைகளில் அதிக அளவு செய்தி வெளி வந்து வைரலானது.

எனவே தன் மகனைப் போல் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கானோர் அந்த நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற வந்த சமயத்தில் அங்கு போதிய வசதி இல்லாத நிலையில் நெப்போலியன் தன் மகனைக் காப்பாற்றிய அந்த வைத்தியருக்காக 10 கோடி செலவில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றைக் கட்டி மயோபதி என்ற பெயரில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மூலம் திறந்து வைத்தார்.


தற்போது இந்த மருத்துவமனைக்கு உலகம் முழுவதும் இருந்து வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன் இந்த விஷயத்தை நெகிழ்ச்சியோடு தெரிவித்ததோடு என் மகன் என்று இப்படி இருப்பதற்கு காரணமே அந்த வைத்தியர் தான் என சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து தன் மகனை காப்பாற்றிய வைத்தியருக்காக மருத்துவமனையை கட்டித் தந்திருக்கும் நெப்போலியனை அனைவரும் பாராட்டி வருவதோடு இது போன்ற நாட்டு மருத்துவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top