நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை வைத்திய குறிப்புகள்.

உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. எனவே துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும். சுவாச சம்பந்தமான நோய்களிலிருந்து குறிப்பாக சளியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும். அதுபோல் வெண்ணையை உண்டு வந்தால் வாய்ப்புண் ஆறும். 

---- Advertisement ----

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர் மோர் இளநீர் அதிகம் உட்கொள்வது நல்லது. இவை உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

தொண்டையில் புண் வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தை பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவேண்டும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து அதில் வெல்லம் நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

 

ஜீரணம் மற்றும் மாந்தத்திற்கு சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை இதனை சாப்பிட்ட உடனேயே நீங்கள் பலனை அடையலாம். 

பெருங்காயம் கடுகு நல்ல மிளகு வசம்பு கருஞ்சீரகம் வெள்ளைப் பூண்டு இவற்றைச் சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்து வந்தால் வாத நோய்கள் நீங்கும்.

சுக்கு உப்பு இரண்டையும் அரைத்து தொண்டையில் பூசினால் பனங்கற்கண்டு மிளகு சேர்த்து உண்டால் இருமல் நின்று விடும்.

கால் வீக்கம் இருந்தால் நல்லெண்ணெய் சாம்பிராணி எலுமிச்சம்பழ சாறு இவற்றை சூடாக்கி இளம் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வீக்கம் குறையும். பச்சரிசி மாவை வேக வைத்து வீக்கத்தில் கட்டினாலும் வீக்கம் குறைந்துவிடும்.

இளைஞர்களின் மனம் நோக செய்வது இளநரை. உடலில் பித்தம் அதிகமாவதால் இளநரை ஏற்படுகிறது. இதற்கு நெல்லிச்சாறு செஞ்சந்தனம் மகிழம்பூ ஆகியவற்றை சேர்த்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பித்தம் தணியும் இளநரை நீங்கும் கண்ணுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

---- Advertisement ----