மனைவியிடம் ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்ட ‘பேட்ட’ வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக்

இந்தி படவுடலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். தனது மனைவி மற்றும் தம்பியிடம் ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு, மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில், சொத்துக்காக, தனது தந்தை, தங்கையை கொலை செய்யும் கேரக்டரில் நடித்தவர். நிஜ வாழ்விலும், பணம்தான் இவருக்கு பிரச்னையாக இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

இந்நிலையில் நவாசுதீன் சித்திக், முன்னாள் மனைவி ஆலியா, தனது தம்பி சமாசுதீன் சித்திக் ஆகியோர் மீது, மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், கடந்த 2008ம் ஆண்டில், தனது தம்பி சமாசுதீன் சித்திக்கை, தனது மேனேஜராக நியமித்து, பண நிர்வாகம் வரவு, செலவு பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.

அவர், நிர்வாக கணக்கு வழக்குளில் மோசடி செய்து, தனது சொத்துகளை அபகரித்து விட்டதாகவம், இதன்மூலம், அவருக்கு என, தனியாக சொத்துகளை வாங்கி, தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கேட்டதால், எனது முன்னாள் மனைவி ஆலியாவை, தம்பி சமாசுதீன் சித்திக் தூண்டிவிட்டு, எனக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும், என்னை இழிவுபடுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

---- Advertisement ----

மேலும், இதுவரை ரூ. 21 கோடி ரூபாய் தன்னை ஏமாற்றி முன்னாள் மனைவி ஆலியா, தம்பி சமாசுதீன் சித்திக் ஆகியோர் மோசடி செய்துவிட்டனர் என்றும், இதனால் ஏற்பட்ட நஷ்டம், மன உளைச்சலுக்காக ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு, நவாசுதீன் சித்திக், மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று ( 30ம் தேதி), விசாரணைக்கு வருகிறது.

---- Advertisement ----