Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நயன்தாரா ஆரம்ப காலங்களில் மலையாள படங்களில் நடித்து அசத்தினார்.


இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் ஐயா திரைப்படத்தில் சரத்குமார் ரோடு ஜோடி போட்டு இணைந்து நடித்த இவர் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் வரிகள் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

நடிகை நயன்தாரா..

இதனை அடுத்து பல தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2005-இல் சந்திரமுகி, சிவகாசி, கஜினி படத்தில் நடித்த இவர் 2006-இல் கள்வன் காதலி, வல்லவன், தலைமகன், ஈ போன்ற படங்களில் நடித்திருந்தார். வல்லவன் படத்தில் ஸ்வப்னா கேரக்டரை சிம்புவோடு செய்த போது இருவர் இடையே காதல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!


எனினும் இவர்கள் காதல் பிரேக் அப் ஆனதை அடுத்து 2007-இல் சிவாஜி படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் வந்திருப்பார். இதனை அடுத்து அதே ஆண்டு பில்லா படத்தில் தனது அபார நடிப்புத்திறனை தல அஜித்தோடு வெளிப்படுத்தி இருப்பார்.

--Advertisement--

மேலும் 2008-ல் யாரடி நீ மோகினி’ குசேலன், சத்யம், ஏகன் போன்ற படங்களில் நடித்த இவர் 2009-இல் ஆதவன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நயந்தாரா வெப் சீரியஸ் மட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படத்திலும் நடித்து அங்கும் தனது அபார நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார்.

13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ்..

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தும் தொழில் அதிபராகவும் திகழும் நடிகை நயன்தாரா அண்மையில் நடித்து வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது.


இதனை அடுத்து ஓ டி டி இல் வெளி வந்த இந்த திரைப்படம் தடை செய்யப்பட்டு நயனுக்கு ஒரு பெருத்த அடியை தந்தது. எனினும் மனம் தளராத நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் வெற்றியை கொடுக்க நடித்த வண்ணம் இருக்கிறார்.

காசுக்காக இப்படியுமா?

இந்நிலையில் நடிகை நயன்தாரா பிரபல இளம் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளி வந்திருக்கிறது.

துருவ் விக்ரமின் அப்பாவான சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை நயன்தாரா தற்போது அவருடைய மகனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் தகவலை கேட்டு ரசிகர்கள் இதெல்லாம் நியாயமா? என்று பல்வேறு வகைகளில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.


இதையும் படிங்க: கோடிகளில் புரண்ட KR விஜயா.. இன்று சோற்றுக்கே கஷ்டம்.. கண்ணீர் கதை..!

மேலும் சில ரசிகர்கள் சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லக்கூடிய வகையில் ரஜினிக்கு சின்ன பொண்ணுக ஜோடியா நடிக்கலையா? அதே ட்ரெண்ட் இப்போ இப்படி மாறி இருக்கு என்று சொல்லி இருப்பதோடு கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

எனினும் படக்குழு தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top