சின்னத்திரை நயன்தாரா மேல.. பெரியத்திரை நயன்தாராவுக்கு என்ன காண்டு..! – ஓ.. அப்படியா விஷயம்..!

சின்னத்திரை நயன்தாரா ( Nayanthara ).. நேச்சுரல் ப்யூட்டி.. என்று வாணிபோஜனிடம் ( Vani Bhojan ) வழிவோர் ஏராளம். சமீபத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் படமொன்றில் அடிப்படை பணிகள் தயாராகின.

அதில் நயனின் தங்கையாக வாணிபோஜனை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், கதையின் டெவலப்மெண்டை கேட்ட நயன்தாரா தன் தங்கையாக வாணி போஜன் நடிப்பதற்கு ஸ்ட்ரிக்டாக நோ சொல்லிவிட்டாராம்.

மற்ற இயக்குனர்கள் போல கிடையாது. இந்த இயக்குனர் கொஞ்சம் தில்லான, ஓப்பனா பேசக்கூடிய தங்கமான மனுஷன். ‘ஏன் மேடம் மறுக்குறீங்க. உங்க தங்கைன்னு சொன்னா கரெக்டா பொருந்துவாங்க.. கதைக்கும் பொருத்தமா இருக்கும்’ என்று மீண்டும் வாணி போஜனை வலியுறுத்தியுள்ளார்.

இயக்குனர் லோக்கல் என்றால்.. நயன்தாரா லோக்கலுக்கே  தூக்கலாச்சே… இதனால் கடுப்பான நயன் ‘அப்பாடினா.. அவங்களை வெச்சே இந்த படத்தை எடுத்துக்குங்க.’ என்று காண்டாகி ஸ்பாட்டை விட்டே கிளம்பி விட்டாராம்.

காரணத்தை விசாரித்தால், வாணி போஜனும் தானும் ஒரே சீனில் ஒன்றாக நடிக்கும் காட்சிகளில் தான் மிகவும் முதிர்ச்சியாய் தெரிந்துவிடுவோம் என யோசிக்கிறாராம் நயன்தாரா. அதன் விளைவே இந்த மறுப்பாம் பாம் பாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …