அடி மேல் அடி..! – நயன்தாரா-வுக்கு புதிய சிக்கல்..! – என்ன கொடுமை இது..?

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு புதிய ரூபத்தில் ஒரு சிக்கல் வந்து இருக்கிறது. அதாவது திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள்.

இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் முறையாக விசாரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கோடம்பாக்கத்தை அதிர வைத்த வருகின்றது.

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை என்ற பட்சத்தில் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறலாம். ஆனால் திருமணமாகி வெறும் நான்கே மாதங்களில் இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருப்பதும்.. அதனை அறிவித்திருப்பது.. சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும்.

பல பெண்கள் பணம் இருந்தால் போதும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரக்கூடும். கணவர்களும் பணம் இருந்தால் போதும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு மனைவியை இளமை மாறாமல் வைத்திருக்கலாம் என்று நினைக்கக் கூடும்.

இது மிகப்பெரிய சமுதாய சீர்கேட்டை உருவாக்கும் என்று பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். அப்படியே குழந்தை பெற்றாலும் கூட குழந்தையை நான்கே மாதத்தில் நாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டோம் என்று இவர்கள் விளம்பரப்படுத்தியது மிகப்பெரிய தவறு.

---- Advertisement ----

அவர்கள் விளம்பரப் படுத்தவில்லை என்றாலும் எதற்காக சமூக வலைதளங்களில் நாங்கள் குழந்தை பெற்றுக் கொண்டோம் என்று அறிவிக்க வேண்டும். இது இவரை பின்பற்றுபவர்களுக்கு மிகப்பெரிய தவறான வழிகாட்டுதலாக இருக்கும் குறிப்பாக பெண்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைந்துவிட கூட வாய்ப்பு இருக்கிறது.

இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நிச்சயம் ஒரு சமுதாய சீர்கேடு உருவாகும் என்று பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இணைய வாசிகள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பிரபலங்களே இப்படி செய்கிறார்கள்.. என்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஒரு விளம்பரமாக இது பார்க்கப்படுகிறது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு வரம் என்றாலும் கூட திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. சட்டத்திற்கும் புறம்பானதாக இருக்கிறது.

எனவே நிச்சயம் நயன்தாரா மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுகின்றன. ஆனாலும் கூட திருமணமாகி விட்டது அவள் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் இந்த நேரத்தில் அவர் மீது நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பாக செய்துவிட்டார் என்று கூறுவது பொருத்தமாக இல்லை.

இவர்களுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவமனைக்கு தெரியாதா..? திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்று அப்படியென்றால் முறையாக அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயன்தாராவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

---- Advertisement ----