பிரபல விஜய் பட நடிகை ஒருவரை நடிகை நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்றில் விளாசி இருக்கிறார். அது குறித்து பதிவுதான் இது.
நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மாளவிகா மோகனன். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில் டாப் நடிகை என்று கூறிக் கொள்ளும் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சியில் நடிக்கிறார்.
ஆனால், அப்போது கூட முகம் முழுதும் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார். என்னதான் கமர்சியல் படம் என்றாலும் கூட அந்த இடத்தில் ஒரு நியாயம் வேண்டாமா..? என்று கேள்வி எழுப்பியது மட்டுமில்லாமல் பயங்கரமாக சிரித்து கலாய்த்தார்.
இது வேறு யாரையும் சொல்லவில்லை நடிகை நயன்தாராவை தான் இப்படி கூறியிருக்கிறார் மாளவிகா மோகன்.
ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நயன்தாரா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சியில் மேக்கப் போட்டுக் கொண்டுதான் நடித்திருப்பார்.
இது குறித்து நடிகை நயன்தாரா பேட்டி ஒன்றில் பேசினார், ராஜா ராணி ஒரு கமர்சியல் திரைப்படம். ஒரு ரியலிஸ்டிக் திரைப்படத்தை நாம் எடுக்கிறோம் என்றால் அதில் இந்த விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
ஆனால் கமர்சியல் திரைப்படத்தில் என்ன முக்கியம்,,? கதையும் திரைக்கதையும் தான் முக்கியம். அந்த இடத்தில் மருத்துவமனையில் மேக்கப் போட்டு கொண்டு நடிப்பதை பெரிதாக பார்க்க கூடாது.
படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் நிச்சயமாக இதனை கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால், ஒரு நடிகை கமர்சியல் படத்தை ஒரு ரியலிஸ்டிக் படத்துடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் என்னைத்தான் பேசினார் என்று நன்றாக தெரியும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.