அடேங்கப்பா..! – நயன்தாராவை டம்மி ஆக்கிய இளம் நடிகை..! – வாயை பிளக்கும் கோலிவுட்..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை நயன்தாரா ( Nayanthara ) தான் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அசால்டாக அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு நாளுக்கு நாள் தன்னுடைய மார்க்கெட்டை சத்தமில்லாமல் உயர்த்தி வருகிறார் அந்த டிவி நடிகை.

முன்னரெல்லாம் சினிமாவில் மார்க்கெட் குறைந்த ஆண்ட்டி நடிகைகள் பெரும்பாலும் சீரியலில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது கதையே வேறு. சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு ஏன், சினிமா நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை நெளிய வைக்கின்றனர்.ஆனால் தற்போது வரை கிளாமர் காட்டாமல் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து கைவசம் 9 படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைதான் பிரியா பவானி சங்கர்.

இவருக்கு சீரியலில் நடிக்கும் போதே ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி மேயாத மான் என்னும் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அன்றிலிருந்து அம்மணிக்கு ஏறுமுகம்தான்.

தற்போது தமிழ் சினிமாவில் கைவசம் அதிகம் படங்கள் வைத்திருக்கும் நடிகைகளில் இவர்தான் நம்பர் ஒன்.இன்றைய தேதிக்கு இளம் நடிகர்களின் பார்வை பிரியா பவானி சங்கர் மீது தான்.

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவே காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்கள்தான் கைவசம் வைத்துள்ளனர்.அப்பேர்ப்பட்ட நடிகையை அசால்டாக தூக்கி சாப்பிட்டு விட்டதாக பிரியா பவானி சங்கரை கோலிவுட்டில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் நயன்தாரா ரசிகர்களோ, எல்லாருமே சூனாபானா ஆகிவிட முடியுமா என எதிர்த்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …