“அப்படி போடு..” – நயன்தாரா எடுத்த முடிவு.. – வாழ்த்துக்களை கூறும் “அரபிக்குத்து” ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் முக்கிய ஜோடிகளான நயன்தாரா ( Nayanthara ) – விக்னேஷ் சிவன் மற்ற ஜோடிகளுக்கும் ரிலேஷன்ஷிப் இலக்குகளை நிர்ணயித்து வருகிறார்கள்.

தாங்கள் காதலில் விழ காரணமாக இருந்த நானும் ரவுடி தான் படத்தின் நினைவாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.

தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘கூழாங்கல்’, ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ மற்றும் ’ஊர்க்குருவி’ ஆகியப் படங்களை தயாரித்திருக்கிறது.

இதில் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கியுள்ளார். இதில் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்த கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.

அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஜோனிடா காந்தி ( Jonita Gandhi ). கனடாவில் வளர்ந்த பஞ்சாபி பெண்ணான இவரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு பாடகியாக அறிமுகப்படுத்தினார்.

2016-ல் சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்தில் ’மெய் நிகரா மெல்லிடையே’ என்ற பாடல் தான் ஜோனிடாவுக்கு முதல் தமிழ் பாடல். அதன் பிறகு பல பாடல்களை பாடியிருக்கிறார்.

குறிப்பாக அனிருத் இசையில், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடலும், பீஸ்ட் படத்தில் ‘அரபிக் குத்து’ பாடலும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து தெறி ஹிட்டாகின. தற்போது நடிகையாகவும் புதிய அவதாரம் எடுக்கும் ஜோனிடா காந்தி மீது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த நயன்தாராவுக்கு ஜொனிடா ரசிகர்கள் நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …