நயன்தாராவுக்கு இப்படி பண்ணா ரொம்ப பிடிக்கும்.. ரகசியம் உடைத்த கலா மாஸ்டர்..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இயக்குனர் ஹரி இயக்கத்தில், முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக நயன்தாராவுக்கு அமைந்தது.

இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக இப்போது நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நயன்தாரா

அவர் கடைசியாக நடித்த படம் அன்னபூரணி. இது அவரது 75வது படம். இந்த படம் சரியான வெற்றியை பெறவில்லை. அதேபோல் இந்தியில் அவர் நடித்த ஜவான் படத்திலும் பெரிய முக்கியத்துவம் அவருக்கு கிடைக்கவில்லை.

ஏனெனில் 1150 கோடி ரூபாய்க்கு வசூலித்த ஜவான், டைரக்டர் அட்லிக்கும், ஷாருக்கானுக்கும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுத் தந்த நிலையில், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கு, அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை.

--Advertisement--

மண்ணாங்கட்டி

இந்த சூழலில் நடிகை நயன்தாரா, இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சினிமா நடிகைகளை பொறுத்தவரை சாப்பாட்டில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். அதுவும் பல ஊர்களுக்கு, பல நாடுகளுக்கு, பல மாநிலங்களுக்கு ஷூட்டிங்காக சொல்லும்போது, அங்கு கிடைக்கும் அந்த ஊர் ஸ்பெஷல் மிக ருசியான விதவிதமான உணவுகள் விரும்பி சாப்பிடும் வாய்ப்பு தானாகவே அவர்களுக்கு அமைகிறது.

உணவு பிரியர்கள்

அதனால் நடிகர், நடிகையர் பெரும்பாலும் உணவுப் பிரியா்களாக தான் இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்த உணவு வகைகள் உள்ளன.

விஜய்க்கு மட்டன் பிரியாணியும், தோசையும் மிகவும் பிடித்த உணவு வகை என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கன் பிரியாணி

அதேபோல் நடிகர் அஜித்குமார் சிக்கன் பிரியாணி பிரியர். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி சிக்கன் பிரியாணி செய்து, அங்கு இருக்கும் படக்குழுவினருக்கு பரிமாறுவது அவரது வழக்கம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிடித்த அசைவ உணவு சிக்கன். கமலுக்கு கேரளா அரிசி மாதமும், கறி மீன் குழம்பும் மிக பிடித்தமானது.

கலா மாஸ்டர்

அதேபோல் நடிகை நயன்தாராவுக்கு என்ன ஐட்டம் பிடிக்கும் என்று பல படங்களில் அவருடன் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த கலா மாஸ்டர் கூறியிருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது

கலா மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகை நயன்தாராவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் கல்லாபட்டி ஸ்டைலில் சிக்கன் செய்து கொடுத்தால் நயன்தாராவுக்கு மிகவும் பிடிக்கும்.

கல்லாப்பட்டி சிக்கன்

நான் நன்றாகவே கல்லாப்பட்டி சிக்கன் செய்வேன். அதை செய்யும்போதெல்லாம் நயன்தாராவுக்கு தவறாமல் அழைப்பு கொடுப்பேன். அவர் வந்து சாப்பிட்டு செல்வார் என பேசி இருக்கிறார் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் அவர்கள்.

நயன்தாராவுக்கு கல்லாபட்டி சிக்கன் பண்ணிணால் ரொம்ப பிடிக்கும் என்று ரகசியம் உடைத்திருக்கிறார் கலா மாஸ்டர்.